Coimbatore, Madurai, Trichy News updates: மதுரை கொட்டித்தீர்த்த மழை - ஆரப்பாளையத்தில் வீடுகளில் புகுந்த நீர்

Coimbatore, Madurai, Trichy News Live- 10 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 10 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai rain

கனமழை- கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை: கொடைக்கானலில் மழை காரணமாக 1-5ஆம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து கொடைக்கானலில் 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடப்பதால் விடுமுறை அளிப்பதை தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sep 10, 2025 22:43 IST

    கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்.. வாகன ஓட்டிகள் சிரமம்.!

    சேலத்தில் பெய்துவரும் கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.



  • Sep 10, 2025 21:17 IST

    மதுரையில் நாளை மதுக்கடைகள் மூடல்

    இமானுவேல் சேகரானாரின் நினைவுதினத்தை ஒட்டி மதுரை மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்படுகிறது. டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைத்து இயங்கும் மதுபான பார்களும் நாளை மூடப்படுகிறது.



  • Advertisment
  • Sep 10, 2025 21:14 IST

    இன்ஸ்டாகிராமில் வீடியோ - மன்னிப்பு கேட்ட கைதான பாலாஜி

    இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவதற்காக தவறேதும் செய்யாதீர்கள். நான் செய்த அனைத்துக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என சில தினங்களுக்கு முன் திருமண மண்டபத்தில் ஒருவர், கடைக்காரர்கள் இருவர், பேருந்து ஊழியர்கள் இருவர், காவலர்கள் இருவர் என பலரை தாக்கிய மூவர் கும்பலை சேர்ந்த பாலாஜி என்ற நபர் வீடியோ மூலம் மன்னிப்பு கோரியுள்ளார். இவ்வழக்கில் கந்தவேல் என்பவரை காவலர்கள் சுட்டுப்பிடித்திருந்தனர். சிவா என்பவர் கால் முறிவுடன் கைதாகியிருந்தார்.



  • Sep 10, 2025 19:38 IST

    இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

    உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது இந்தியா - ஐரோப்பியா ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடித்தினார்.  



  • Advertisment
    Advertisements
  • Sep 10, 2025 18:59 IST

    அன்புமணி உரிமை மீட்பு பயணம் - கிராமம் கிராமமாக ராமதாஸ் சுற்றுப் பயணம்

    அன்புமணி உரிமை மீட்பு பயணம் செல்லும் நிலையில் ராமதாஸ் கிராமம் கிராமமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மதுராந்ததம் அருகே உள்ள சூனாம்பேடு கிராமத்தில் கிராம கூட்டம் நடைபெற்றது. பாமக மாவட்ட செயலாளர் சாந்த மூர்த்தி தலைமையில் நடந்த கிராம கூட்டத்தில் ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.



  • Sep 10, 2025 18:59 IST

    திருப்பூர் - பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

    திருப்பூர் பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.



  • Sep 10, 2025 16:13 IST

    திருச்சியில் வரும் 13ஆம் தேதி விஜய் பிரசாரம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி

    திருச்சியில் வரும் 13ஆம் தேதி விஜய் பிரசாரம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது காவல்துறை. மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்ய காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றது தவெக



  • Sep 10, 2025 15:50 IST

    சேலத்தில் காணாமல்போன 9 மாத பெண் குழந்தை மீட்பு

    சேலத்தில் காணாமல்போன 9 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அழகாபுரம் மேம்பாலத்தின் கீழ் தங்கியிருந்த மதுரை - பிரியா தம்பதியின் 9 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது. 9 வயது பெண் குழந்தையை ரமேஷ் என்பவர் கடத்திச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. நாமக்கல்லில் பதுங்கி இருந்த ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.



  • Sep 10, 2025 15:42 IST

    திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்

    திருவாரூர், நன்னிலத்தில் ஆயுதப்படை மைதானம் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன். அருகில் இருந்த பனை மரத்திலும் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



  • Sep 10, 2025 15:38 IST

    ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதி ரத்து

    ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது ஓஎன்ஜிசி -க்கு விளக்கம் கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி வழங்கப்பட்ட தகவல் அண்மையில் வெளியானது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அனுமதியை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது.



  • Sep 10, 2025 15:20 IST

    "விவசாய நிலங்களை அழித்து விட்டு நிலக்கரி எடுப்பதா?" - அன்புமணி ராமதாஸ்

    "பழுப்பு நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும். மின்சாரம் தயாரிக்க சூரிய மின்சக்தி, காற்றாலை என பல்வேறு வழிகள் உள்ளது. முந்திரி விவசாயிகளுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கடலூர் விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எதுவும் செய்யவில்லை" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 



  • Sep 10, 2025 14:25 IST

    கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ‘வீல் சேர்’ கொடுக்காத 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

    கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வீல்சேர் (சக்கர நாற்காலி) வழங்க மறுத்த விவகாரத்தில் இரண்டு பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருக்கு வீல்சேர் கொடுக்கப்படாததால், அவரது மகன் தனது தந்தையைத் தோளில் சுமந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த விவகாரம் தொடர்பாக, வீல்சேர் வழங்க மறுத்ததாகக் கூறப்படும் இரண்டு பணியாளர்களான எஸ்.ஜி.ராணி மற்றும் மணிவாசகம் ஆகியோர் ஐந்து நாட்களுக்குப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



  • Sep 10, 2025 14:17 IST

    த.வெ.க-வுக்கு இடையூறு தந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? - அமைச்சர் கே.என். நேரு

    திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, “த.வெ.க-வுக்கு இடையூறு தந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத இடமாகப் பார்த்துதான் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி கொடுக்கிறது ” என்று கூறினார்.



  • Sep 10, 2025 13:58 IST

    கன்னியாகுமரியில் கண்ணாடிப் பாலம் சரிசெய்யப்பட்டது - அமைச்சர் எ.வ. வேலு

    கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டில் உள்ள கண்ணாடிப் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரியில் அமைந்துள்ள கண்ணாடிப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து விளக்கமளித்த அமைச்சர் எ.வ.வேலு, "கண்ணாடிப் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பாலத்தில் உடைந்திருப்பது என்பது தவறான தகவல். பாலத்தின் மீது சுத்தியல் கீழே விழுந்ததால் சிறு கீறல் மட்டுமே ஏற்பட்டது. கண்ணாடிப் பாலத்தில் ஒரே நேரத்தில் 650 பேர் நிற்கும் உறுதித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். 



  • Sep 10, 2025 12:29 IST

    கிருஷ்ணகிரி அணையில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தண்ணீரில் குதித்து தற்கொலை முயற்சி

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். குப்பம் பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மண மூர்த்தி (50) மனைவி ஜோதி (40), மகள் கிர்த்திகா (20), ஜோதியின் தாயார் சாராதாம்மாள் (75) நால்வரும் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீரில் குதித்துள்ளனர். அங்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக தண்ணீரில் குதித்து ஜோதி, கிர்த்திகா இருவரையும் மீட்டனர். லக்ஷ்மண மூர்த்தி, சாராதாம்மாள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.



  • Sep 10, 2025 11:58 IST

    காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை மாவட்ட நீதிபதி ரிமாண்ட் செய்த விவகாரம்

    காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை மாவட்ட நீதிபதி ரிமாண்ட் செய்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மாவட்ட நீதிபதி முறையான நிர்வாக ஒப்புதல் பெறவில்லை எனக் கூறி, கைது உத்தரவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. முன்விரோத பிரச்சினையில், டி.எஸ்.பி.யை மாவட்ட நீதிபதி ரிமாண்ட் செய்துள்ளதாக டி.எஸ்.பி. தரப்பில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டி உள்ளார். 



  • Sep 10, 2025 11:54 IST

    பரப்புரை பாதையை மாற்றும் விஜய்

    திருச்சியில் செப்.13ஆம் தேதி டிவிஎஸ் டோல்கேட் தொடங்கி போஸ்ட் ஆபீஸ், பாரதியார் சாலை, மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் பேச உள்ளார்.

    சத்திரம் பேருந்து நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது பரப்புரை பயண பாதையை மாற்றியுள்ளார். சத்திரம் பேருந்து நிலையம் செல்லாமல் காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து அரியலூர் செல்கிறார்



  • Sep 10, 2025 11:52 IST

    மதுரையில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

    இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி மதுரை மாவட்டத்தில் நாளை (செப் 11) அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Sep 10, 2025 11:47 IST

    செங்கோட்டையன் இல்லத்தில் திரளும் ஆதரவாளர்கள்

    நேற்று டெல்லி சென்று அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிலையில் அடுத்த கட்ட முடிவு குறித்து ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நட த்தி வருகிறார்.  ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லத்தில் ஆதரவாளர்கள் திரண்டு உள்ளனர்.



  • Sep 10, 2025 10:57 IST

    தாமிரபரணியைத் தலைமுழுகவிட்டதா திமுக அரசு? நயினார் நாகேந்திரன்

    தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகவிட்டதா திமுக அரசு?; தென் தமிழக மக்களின் அடிப்படைத் தேவை இப்படி அந்தரத்தில் ஊசலாடுவது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தக் கவலையுமில்லையா? தாமிரபரணி ஆற்றில் கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது திமுக அரசு

    நயினார் நாகேந்திரன் விமர்சனம்



  • Sep 10, 2025 10:51 IST

    அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதம்

    திருநெல்வேலி: மணிமுத்தாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து சேதமடைந்தது, அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளும் நீரில் மூழ்கி வீணாகியது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்



  • Sep 10, 2025 10:28 IST

    கல்லட்டி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

    ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையின் 20வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத பாறையும், ஒரு பெரிய மரமும் மலை உச்சியிலிருந்து உருண்டு வந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வனத்துறையினர், பாறையையும் மரத்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, போக்குவரத்து சீரானது.



  • Sep 10, 2025 09:54 IST

    கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து

    கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பலத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலின் நிலையற்ற தன்மை காரணமாக சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.



  • Sep 10, 2025 09:23 IST

    செங்கோட்டையன் வீட்டில் குவிந்த 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள்

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் வந்துள்ளனர். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வந்துள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • Sep 10, 2025 09:21 IST

    வெள்ளப்பெருக்கு: கொடை கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

    வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரையில் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனத்தில் வெள்ளகெவி, வட்டக்கானலில் கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.



  • Sep 10, 2025 09:19 IST

    உதகை மலைப்பாதையில் விழுந்த பாறைகள் - போக்குவரத்து பாதிப்பு

    உதகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாறைகள் விழுந்த பகுதியிலேயே மீண்டும் பாறைகள் உருண்டு வந்து விழுந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் உதகை - மசினகுடி இடையே அதிகாலை முதல் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.

     



  • Sep 10, 2025 09:19 IST

    கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மழை காரணமாக 1-5ஆம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து கொடைக்கானலில் 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடப்பதால் விடுமுறை அளிப்பதை தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: