/indian-express-tamil/media/media_files/2025/09/25/vellore-4-years-old-kid-kidnapping-case-driver-arrested-2025-09-25-18-11-50.jpg)
நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இந்த தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற உள்ளது.
தனியார் பேருந்து மீது லாரி மோதி 15 பேர் படுகாயம்: உளுந்தூர்பேட்டை அருகே தனியார் டிராவல்ஸ் பேருந்து மீது லாரி மோதி விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் விபத்துக்குள்ளான பேருந்து 2 கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- Sep 25, 2025 17:47 IST
வேலூரில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் - கார் ஓட்டுநர் கைது
வேலூர் - குடியாத்தத்தில் மிளகாய் பொடி தூவி 4 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.முன்விரோதம் காரணமாக குடியாத்தத்தில் வீடுபுகுந்து கடத்தப்பட்ட சிறுவன் திருப்பத்தூரில் நேற்று மீட்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட பாலாஜி என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்த நிலையில் கார் ஓட்டுநர் விக்ரம் என்பவரும் கைது
- Sep 25, 2025 16:50 IST
குமரியில் கனமழை: தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து மந்தம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மார்த்தாண்டம் பகுதியில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது
- Sep 25, 2025 14:36 IST
’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை - அறிக்கை தாக்கல்
மதுரை ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என மாநகராட்சி சார்பில், உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த 7ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சிக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது
- Sep 25, 2025 14:20 IST
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
கோவை, நெல்லை, தென்காசி, நீலகிரி, குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நாளை கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் கனமழை. வரும் 27ம் தேதி கோவை மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Sep 25, 2025 12:57 IST
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Sep 25, 2025 11:50 IST
முதியவரிடம் திருடப்பட்ட ₹10 லட்சம் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேருந்து நிலையத்திற்கு ₹10 லட்சம் பணத்துடன் வந்த பரமசிவம் (87) என்ற முதியவரிடம், ஓய்வெடுக்க விடுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பணத்தைத் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம், விருவீராட்டி அருகே உள்ள சாமியார் முப்பனூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (35) என்பது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து முழுப் பணமும் மீட்கப்பட்டது.
தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
- Sep 25, 2025 11:41 IST
பாய்ந்து வந்த கரடி... குடையால் விரட்டி அடித்த தொழிலாளி!
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே உள்ள லோயர் பாரளை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த கரடி ஒன்று, அங்கு பணியில் இருந்த தொழிலாளி ஒருவரைத் தாக்க முயன்றது. எதிர்பாராத விதமாக கரடியைக் கண்ட அந்தத் தொழிலாளி, தான் வைத்திருந்த குடையை சட்டென விரித்து அதை நோக்கி பிடித்தார். இதனால் மிரண்டுபோன கரடி, அங்கிருந்து திரும்பி ஓடியது. இந்த திகிலூட்டும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Sep 25, 2025 10:26 IST
துர்நாற்றத்துடன் குடிநீர்: பொதுமக்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்துத்தெரு பகுதியில், கடும் துர்நாற்றத்துடன் கூடிய காவேரி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை கண்டித்து, அவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- Sep 25, 2025 09:49 IST
4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நகரின் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
- Sep 25, 2025 09:16 IST
தமிழக மீனவர்கள் 11 பேர் நிபந்தனையுடன் விடுதலை
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆக. 13ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் கடந்த ஆக. 5ம் தேதி திருப்பாலைக்குடி பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 நாட்டுப்படகு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களை நீதிபதி, நிபந்தனையின்றி விடுதலை செய்தார். விடுதலையான மீனவர்கள் 11 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- Sep 25, 2025 09:12 IST
டிராவல்ஸ் பேருந்து மீது லாரி மோதி 15 பேர் காயம்
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் டிராவல்ஸ் பேருந்து மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் விபத்துக்குள்ளான பேருந்து இரண்டு கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
- Sep 25, 2025 09:12 IST
5 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.