Coimbatore, Madurai, Trichy News Live: சிதம்பரம் கோயில் கனகசபையில் யார் யாருக்கு அனுமதி? -ஐகோர்ட்

Coimbatore, Madurai, Trichy News Live- 11 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 11 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chidambaram kanagasabai

சிதம்பரம் கோயில் கனகசபையில் யார் யாருக்கு அனுமதி? ஐகோர்ட் கேள்வி

நீலகிரி வியாபாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம்: ஊருக்குள் வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து நீலகிரியில் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று காலை முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Sep 11, 2025 20:24 IST

    கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 

    கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சார்பதிவாளர்கள் ரகு உத்தமன், ஜெசிந்தா மற்றும் தரகர் ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Sep 11, 2025 20:24 IST

    கூடங்குளம் அருகே கோயில் சிலை உடைப்பு விவகாரத்தில் இருவர் கைது!

    தூத்துக்குடி மாவட்டம் கூடங்குளம் அருகே கோயில் சிலை உடைப்பு விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைராவி கிணறு கிராமத்தில் கோயில் சிலை உடைப்பு சம்பவத்தில் தவசிகுமார், சுயம்புலிங்கம் கைது. கோயிலுக்கு அசைவ கொடை, சைவை கொடை வழங்கும் விவகாரத்தில் இருதரப்பு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.



  • Advertisment
  • Sep 11, 2025 20:01 IST

    அருப்புக்கோட்டை: 2 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு

    அருப்புக்கோட்டையில் 2 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் உத்தரவிட்டுள்ளார். அரசு பேருந்து மோதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்காத விவகாரத்தில் அணையிடப்பட்டுள்ளது. மதுரை சென்ற அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் முத்துக்கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். முத்துக்கிருஷ்ணன் மனைவிக்கு ரூ.31.50 லட்சம் இழப்பீடு வழங்க சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.



  • Sep 11, 2025 19:58 IST

    பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் – பார்த்திபனூரில் பரபரப்பு

    பரமக்குடியில் நடைபெறவுள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்லும் வழியில் பார்த்திபனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் பேருந்துகள், கார்களில் ஆபத்தான முறையில் பயணித்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. குறிப்பாக, ஒரு காரின் உள்ளே இருந்த இளைஞர் ஒருவர், காரின் மேற்கூரையை நோக்கி ஏற முயன்றபோது சமநிலையை இழந்து சாலையில் கீழே விழுந்தார்.

    இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, பின்னால் வந்த வாகனம் உடனடியாக பிரேக் அடித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார். இதனை கண்டு அப்பகுதி மக்கள் பயத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Sep 11, 2025 18:47 IST

    சிதம்பரம் கோயில் கனகசபையில் யார் யாருக்கு அனுமதி? - உயர் நீதிமன்றம் உத்தரவு

    சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் சாசன பதவி வகிப்போருக்கு மட்டுமே அனுமதி என உயர் நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் தரப்பு பதில் அளித்துள்ளது. கனகசபை மீதேறி தரிசனம் செய்ய பொது மக்களுக்கு அனுமதி அளித்த உத்தரவை தீட்சிதர்கள் மாற்ற முடியாது என அறநிலையத்துறை தரப்பு வாதமிட்டுள்ளது. கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பதை மனுவாக தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்தமாதத்திற்கு ஒத்திவைத்தனர்.



  • Sep 11, 2025 17:50 IST

    உளுந்தூர்பேட்டையில் காற்றுடன் கூடிய மழை

    உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பரவலாக காற்றுடன் கூடிய மழை பெய்தது. 



  • Sep 11, 2025 17:14 IST

    காரின் மேற்கூறையில் ஏற முயன்ற இளைஞரொருவர் தவறி சாலையில் விழுந்தததால் பரபரப்பு

    பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக பார்த்திபனூர் பகுதியில் ஆபத்தான முறையில் பேருந்து மற்றும் கார்களில் பயணித்த இளைஞர்கள் மற்றும் பெண்களால் அதிர்ச்சி. இதில் பார்த்திபனூர் அருகே ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் ஏற முயன்ற இளைஞரொருவர், தவறி சாலையில் விழுந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, பின்னே வந்த வாகனம் உடனடியாக பிரேக் அடித்ததால், அந்த இளைஞர் நூலிழையில் உயிர்தப்பினார்.



  • Sep 11, 2025 16:50 IST

    தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளது.



  • Sep 11, 2025 15:52 IST

    ஒசூர் எல்காட்டில், அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனத்தின் 2 புதிய திட்டங்களுக்கு முதலவர் அடிக்கல் நாட்டினார்

    ஒசூர் எல்காட்டில், அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனத்தின் 2 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனத்தின் புதிய 2 திட்டங்களால் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.



  • Sep 11, 2025 15:49 IST

    நெல்லை ஜங்சன் பஸ் நிலையம் செயல்படக்கூடாது - மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பரிந்துரை

    மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாத‌தால் நெல்லை ஜங்சன் பேருந்து நிலையம் செயல்படக்கூடாது என்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை மூடவும் நெல்லை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தலைமையகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்  அரசின் அனுமதி இன்றி உணவகம், ஓட்டுநர் அறை, கழிப்பறை திறக்கப்பட்டுள்ளதாக  மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றச்சாட்டு.



  • Sep 11, 2025 11:49 IST

    அன்புமணி அவசர ஆலோசனை

    கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கடலூரில் பா.ம.க நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார்



  • Sep 11, 2025 10:17 IST

    த.வெ.க.,விற்கு இடையூறு செய்து நாங்கள் என்ன செய்ய போகிறோம் - கே.என்.நேரு

    விஜய் பரப்புரை செய்வதற்கு தி.மு.க இடையூறு செய்கிறதா என்ற கேள்விக்கு, “த.வெ.க.,விற்கு இடையூறு செய்து நாங்கள் என்ன செய்ய போகிறோம்” என அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்



  • Sep 11, 2025 10:01 IST

    மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய மன்னன் பெயர்: சீமான்

    "மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். அதுதான் எங்களுக்கும் பெருமை, நாடகத்தின் நிலைப்பாடும் இதுதான்."

    விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் இவ்வாறு பதிலளித்தார்



  • Sep 11, 2025 09:23 IST

    நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை: நயினார் நாகேந்திரன்

    பாரதிய ஜனதா கட்சிக்கு அ.தி.மு.கவை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை, அ.தி.மு.கவைத்தான் கூட்டணியின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். மேலும், அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாகச் சொல்லும் தகவல் குறித்து எனக்கு முழு விவரம் தெரியாது. பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தன் மீது அளவற்ற பாசம் வைத்துள்ளதால், நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை.

    டெல்லி செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி



  • Sep 11, 2025 09:21 IST

    மு.க. ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி பயணம்

    மு.க. ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஓசூரில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அமையவிருக்கும் புதிய நிறுவனத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.



  • Sep 11, 2025 09:20 IST

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் சொந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.



  • Sep 11, 2025 09:20 IST

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய  மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

    சென்னை வானிலை ஆய்வு மையம் 



  • Sep 11, 2025 09:20 IST

    ஒசூரில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு

    ஓசூரில் இன்று நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீட்டிற்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 49 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: