Coimbatore, Madurai, Trichy News: சினிமாவில் ஆள்பவர்கள் நிஜத்தில் ஆளவார்கள் என நினைப்பது தவறு - மதுரையில் அண்ணாமலை பேச்சு

Coimbatore, Madurai, Trichy News Live- 12 October 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 12 October 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamal

மேட்டூருக்கு நீர் வரத்து கிடுகிடு உயர்வு: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 29,540 கன அடியில் இருந்து, இன்று காலை நிலவரப்படி 59,123 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12,500 கன அடி நீர் வெளியேற்றம். நீர் மட்டம் 115.18 அடியாகவும், நீர் இருப்பு 85.991 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

Advertisment

ஓசூர் அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: ஓசூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்துக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சானமாவு வனப்பகுதி அருகே நடந்த இந்த விபத்தில் 2 கார், 2 லாரி, 1 மினி லாரி என 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 6,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

  • Oct 12, 2025 22:05 IST

    அதிமுக - பாஜக கூட்டணி இயற்கையானது - நயினார் நாகேந்திரன்

    அதிமுக, பாஜக ஒழுக்கம் நிறைந்த கட்சித்தலைவர்கள் உருவாக்கியது. ஒழுக்கம் நிறைந்த கட்சி, பாஜக ஒழுக்கம் நிறைந்த கூட்டம் பாஜக கூட்டம். அதிமுக - பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி என நயினார் நாகேந்திரன் மதுரையில் பேசியுள்ளார்.



  • Oct 12, 2025 21:06 IST

    நாமக்கல் கிட்னி திருட்டு - இருவர் கைது

    நாமக்கல் பள்ளிபாளையத்தில்  வறுமையில் உள்ளவர்களை குறிவைத்து அரங்கேறிய கிட்னி திருட்டு ஊதஊ்த வழக்கில் ஸ்டான்லி மோகன், ஆனந்த்  இருவரையும் கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Advertisment
    Advertisements
  • Oct 12, 2025 21:04 IST

    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தென்காசி, விருதுநகர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை ஆகிய 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 12, 2025 20:17 IST

    சினிமாவில் ஆள்பவர்கள் நிஜத்தில் ஆளவார்கள் என நினைப்பது தவறு - மதுரையில் அண்ணாமலை பேச்சு

    வேட்டிகட்டியவர் பேண்ட் போட்டுள்ளார் இதுதான் நான்கரை ஆண்டுகளில் இதுதான் திமுக வெற்றி. ஸ்பெயினில் விளையாடிகொண்டிருந்த பையன் இன்று ஹீரோவாக ஆகிருக்கார். சினிமாவில் ஆள்பவர்கள் நிஜத்தில் ஆள்பார்கள் நினைப்பது தவறு. வெறும் பொம்மை முதலமைச்சராக இருந்துகொண்டு ஸ்டாலின் என்ன செய்துள்ளார்? ம.பி-யில் இருமல் மருத்து எடுத்துக்கொண்டு குழந்தைகள் இறந்ததற்கான மருந்து ஆலையை  ஆய்வு செய்யாமல் இருந்தது தான் தமிழக அரசின் சாதனை என மதுரையில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.



  • Oct 12, 2025 19:00 IST

    சிறப்பு பாடல் வெளியீடு

    மதுரையில் இன்று முதல் கட்ட சுற்றுப்பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்கிய நிலையில் தேர்தல் பாடல் வெளியிடப்பட்டது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல் ஒலிபரப்பிய நிலையில்  குறும்படமும் வெளியிடப்பட்டது.



  • Oct 12, 2025 18:46 IST

    நயினார் நாகேந்திரன் மேடைக்கு வருகை

    அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.  தென்னிந்திய பார்வட் கட்சிதலைவர் திருமுருகன்ஜி பங்கேற்றுள்ளார்.  கூட்டத்திற்கு அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வருகை தந்துள்ளனர். மேலும் நயினார் நாகேந்திரன் தற்போது மேடைக்கு வருகை தந்துள்ளார்.

     

     



  • Oct 12, 2025 18:31 IST

    நயினார் நாகேந்திரன் இன்று மதுரையில் சுற்றுப்பயணம்

    தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் உறுதியை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழர் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மதுரையில் இன்று முதல் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். 
    அதன் கூட்டம் மதுரை அம்பிகா திரை அரங்க அருகில் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சி சார்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.



  • Oct 12, 2025 18:26 IST

    நெல்லை- காவல்நிலைய சுவரில் நாட்டுவெடிகுண்டு வீச்சு

    நெல்லைதச்சநல்லூர்காவல்நிலையமுன்புறச்சுவரில்இருபெட்ரோல்குண்டுகள்வீசப்பட்டது. இதேகாவல்நிலையத்திற்குஉட்பட்டகணபதிமில்ஸ்சோதனைசாவடியிலும்பெட்ரோல்குண்டுகள்வீடப்பட்டுள்ளன.

     



  • Oct 12, 2025 17:51 IST

    மினி சித்திரை திருவிழா

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மதுரையில் நடைபெறும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிகழ்ச்சியில் மினி சித்திரைத் திருவிழா போல் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு போல போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். 



  • Oct 12, 2025 17:19 IST

    ஆற்றில் மாயமான பள்ளி மாணவன் சடலமாக மீட்பு

    தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் எத்திராஜின் உடல் 20 கி.மீ தொலைவில் சடலமாக மீட்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் தனது நண்பர்களுடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, குளித்தபோது மாயமான நிலையில் பலியானார்.



  • Oct 12, 2025 17:14 IST

    மயங்கி விழுந்ததா? வாகனம் மோதியதா? சந்தேகத்தை கிளப்பும் உயிரிழப்பு

    வாணியம்பாடியில் சாலையில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி நபர் ஒருவர் உயிரிழந்ததாக எண்ணிய  நிலையில் இருசக்கர வாகனம் மோதியதில்தான் அந்த நபர் உயிரிழந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவரின் உறவினர்கள் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.



  • Oct 12, 2025 17:07 IST

    மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த குரங்கு

    பெரம்பலூர் அருகே மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டியில் அழுகிய நிலையில் குரங்கு கிடந்தது. புழுக்களுடன் குடிநீர் வெளியானதால் பொதுமக்கள் நடத்திய சோதனையில், தொட்டியில் குரங்கு கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இப்பகுதி மக்கள், இதுபோன்று இனி நடக்காமல் இருக்க அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Oct 12, 2025 16:40 IST

    சாத்தனூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

    சாத்தனூர் அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 9,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்



  • Oct 12, 2025 15:41 IST

    அ.தி.மு.க கூட்டத்தில் த.வெ.க கொடி குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் சூசகமான பதில்

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரனிடம் அ.தி.மு.க கூட்டத்தில் த.வெ.க கொடி காட்டப்படுவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, “தொண்டர்களால் சேர்வதுதான் இயற்கையான கூட்டணி” என்று கூறினார்.

    அ.தி.மு.க தொண்டர்கள்தான் த.வெ.க கொடியைப் பிடித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “அது பற்றி எனக்கு தெரியாது” என்று நயினா நாகேந்திரன் கூறினார்.



  • Oct 12, 2025 15:32 IST

    கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு

    கள்ளக்குறிச்சி அருகே தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற எத்திராஜ் என்ற 10-ம் வகுப்பு மாணவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். நீண்ட நேரம் போராடி மாணவனின் உடலை தீயணைப்புத் துறையினர் மாணவன் சடலமாக மீட்டனர்.



  • Oct 12, 2025 15:23 IST

    ஆடுதுறை பள்ளி கழிவறை தடுப்புச் சுவர் விவகாரம்: அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

    ருவிடைமருதூர் அருகே ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை தடுப்புச் சுவர் விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி வருகிற 15-ம் தேதி ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவர் ம.க.ஸ்டாலின் அறிவித்தார்.



  • Oct 12, 2025 14:57 IST

    தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் எச்சரிக்கை

    ரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்: “அதிக கட்டணம் அறிவித்த தனியார் ஆம்னி பேருந்துகள், நாளைக்குள் அதிக கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.



  • Oct 12, 2025 14:51 IST

    நீதிபதி குறித்து அவதூறு பதிவு; த.வெ.க திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கைது

    த.வெ.க திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நிர்மல்குமாரை காவல்துறை கைது செய்தது. நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாக நிர்மல்குமாரை சாணார்பட்டி காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.



  • Oct 12, 2025 13:04 IST

    மீனவர்கள் போராட்டம்- 2-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • Oct 12, 2025 12:29 IST

    கூடுதல் அதிகாரிகள் கரூர் வருகை

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (SIT) எட்டாவது நாளாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையை மேலும் தீவிரப்படுத்த, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, SIT குழுவின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டுள்ளது

     



  • Oct 12, 2025 12:25 IST

    பெற்ற தந்தையை ட்ராக்டர் ஏற்றிக் கொலை செய்த மகன்

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே சொத்து தகராறில், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலரான 70 வயது பழனி என்பவரை, அவரது இரண்டாவது மனைவியின் மகன் சந்திரசேகர் ட்ராக்டர் ஏற்றிக் கொலை செய்துள்ளார். இரு மனைவிகள் கொண்ட பழனிக்கும், சந்திரசேகருக்கும் இடையே சொத்துப் பிரச்சனை இருந்துள்ளது. இன்று காலை ஏரிக்குச் சென்ற பழனியை சந்திரசேகர் ட்ராக்டரை ஏற்றி கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். சடலத்தை மீட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Oct 12, 2025 12:02 IST

    2வது நாளாக வேலைநிறுத்தம்

    இலங்கை கடற்படையால் கைது செய்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



  • Oct 12, 2025 11:54 IST

    தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து விநாடிக்கு 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த வெளியேற்றத்தின் அளவு 9,000 கன அடி நீர் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     

     

     

     



  • Oct 12, 2025 11:54 IST

    தீயணைப்பு நிலையம் திறப்பு

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே தற்காலிகமாக செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தரக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய நிலையத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து, தீயணைப்பு வாகன சேவையையும் தொடங்கி வைத்தார்.



  • Oct 12, 2025 11:52 IST

    தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக வெண்மை நுரை

    ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக தொழிற்சாலைக் கழிவுகளின் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் அந்தத் தண்ணீரில் குவியல் குவியலாக வெண்மையான நுரை மிதந்து வருகிறது

    Video: Sun News



  • Oct 12, 2025 11:39 IST

    அதிமுக, திமுக தனித்தனியாக பூமி பூஜை

    நாமக்கல்: குப்பாண்டபாளையம் ஊராட்சியில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் என இருவகையிலும் நிதி வழங்கப்படுவதால், அதிமுக மற்றும் திமுக என இரு தரப்பினரும் தனித்தனியாக பூமி பூஜை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது



  • Oct 12, 2025 11:14 IST

    சபாநாயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் பொறுப்பு

    சபாநாயகர் அப்பாவு மகனான அலெக்ஸ் அப்பாவு, நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் அந்தப் பொறுப்பில் இருந்த கிரகாம் பெல், மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, தற்போது அலெக்ஸ் அப்பாவுக்கு இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.



  • Oct 12, 2025 11:13 IST

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் டிச.8ம் தேதி குடமுழுக்கு- அமைச்சர் சேகர் பாபு

    பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிச.8ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறும் என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். இதற்காக, கோயிலில் சமீபத்தில் சுமார் ரூ.26 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



  • Oct 12, 2025 11:12 IST

    எலி காய்ச்சல்: நெல்லை ஆட்சியர் விளக்கம்

    தனியார் கல்லூரி வளாகத்தில் குடிநீர் குளோரினேஷன் சரிவர இல்லாததால் ஏற்பட்ட எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ளனர் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அக் கல்லூரியை சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.



  • Oct 12, 2025 10:53 IST

    ஆண்கள் மட்டுமே வழிபாடு செய்யும் திருவிழா

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பகுதியில், பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு செய்யும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக, எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் 39 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்ட கறி விருந்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

     



  • Oct 12, 2025 10:45 IST

    மூன்றாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை

    தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று அணைக்கு வினாடிக்கு 2,647 கனஅடி நீர் வரத்தாக இருந்த நிலையில் இன்று அணைக்கு வினாடிக்கு 2,075 கன அடி நீர் வரத்தாக உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,999 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி ஆகா இருக்கும் நிலையில் தற்போது அணையில் 40.51 அடிவரை நீர் உள்ளது. அணையில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Oct 12, 2025 10:24 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 59,123 கனஅடியாக அதிகரிப்பு

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 29 ஆயிரத்து 540 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 59 ஆயிரத்து 123 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 115.18 அடியாகவும், நீர் இருப்பு 85.991 டி.எம்.சி.ஆகவும் உள்ளது.



  • Oct 12, 2025 10:23 IST

    குழந்தைக்கு போலியோ சொட்டு மருத்து முகாம் தொடக்கம்

    தாம்பரம் திருநீர்மலையில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருத்து வழங்கி, சிறப்பு முகாமை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.



  • Oct 12, 2025 10:22 IST

    தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்

    தமிழ்நாட்டில் இன்று முதல்(12-10-2025) வரும் அக்.18ம் தேதி வரை 7 முதல் 11 செ.மீ வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கணித்துள்ளது.



  • Oct 12, 2025 09:26 IST

    சாத்தனூர் அணையில் இருந்து 6,000 கனஅடி உபரிநீர் திறப்பு

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி 12.09.2025 அன்று முதல் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அன்று முதல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது (12.10.2025 காலை 6 மணி) வினாடிக்கு 6000 கனஅடி நீர் வெளியற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையின் காரணமாகவும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 7000 கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றபடுவதலும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8500 கன அடியாக உள்ளது. 



  • Oct 12, 2025 09:25 IST

    தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     



  • Oct 12, 2025 09:25 IST

    ஓசூர்: அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி 4 பேர் உயிரிழப்பு

    ஓசூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சானமாவு வனப்பகுதி அருகே நடந்த இந்த விபத்தில் 2 கார், 2 லாரி, 1 மினி லாரி என 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி இன்று அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று பேரண்டபள்ளி வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து முன் சென்ற மினி லாரி மீது மோதியது. காருக்கு பின் தொடர்ந்து வந்த லாரியும் இந்த வாகனங்கள் மீது மோதியது. அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.



  • Oct 12, 2025 09:12 IST

    6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

    செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 7,091 மையங்களில் நடைபெறும் இம்முகாமில் 7.88 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு செய்யப்பட்டுள்ளது. 



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: