Coimbatore, Madurai, Trichy News Live: ஒ.பி.எஸ், டி.டி.வி கூட்டணியில் இருக்க வேண்டும்: அண்ணாமலை

Coimbatore, Madurai, Trichy News Live- 9 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 9 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai press meet

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இன்று முதல் செப்டம்பர் 15 வரையிலும், பின்னர் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 31 வரையிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள், தேவர் குருபூஜை உள்ளிட்டவை வர உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sep 09, 2025 21:48 IST

    இ.பி.எஸ்-யை மாற்றினால் என்டிஏ கூட்டணியில் இணைவோம்: டி.டி.வி நிபந்தனை

    முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் என்டிஏ கூட்டணியில் இணைய தயார்.  தென் தமிழக அமைதியை சீர்குலைக்க முயற்சிகும் இ.பி.எஸ்-யை மாற்றினால் என்டிஏ கூட்டணியில் இணைவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.



  • Sep 09, 2025 20:38 IST

    ஓபிஎஸ் மற்றும் டிடிவி கூட்டணியில் இருக்க வேண்டும்: அண்ணாமலை

    மதுரை: ஓபிஎஸ் மற்றும் டிடிவி கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இருவரிடமும் தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைக்கும்போது அதைத்தான் சொல்கிறேன் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • Advertisment
  • Sep 09, 2025 19:12 IST

    நெல்லை ஐ.டி. பொறியாளர் கொலை வழக்கு - காவலை நீட்டித்து உத்தரவு 

    நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபாலன் ஆகிய மூவருக்கும் வரும் 24ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 09, 2025 18:30 IST

    திருச்சியில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி; காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம்

    தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், செப்டம்பர் 13 அன்று திருச்சியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். முக்கிய நகரங்களில் ரோடு ஷோ மற்றும் திறந்த வேனில் பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு வாகனம் ஒன்றும் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் தவெக தலைவர் விஜய், விமான நிலையத்திலிருந்து டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதிக்கு சுமார் 11 மணியளவில் வருகை தருகிறார். 
    திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சார வாகனத்திலிருந்து பேசுவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரோடு - ஷோ நடத்தக்கூடாது என சில கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
    முன்னதாக இன்று நண்பர்கள் தவெக வடக்கு மாவட்ட செயலாளர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட வழக்கறிஞர் பிரிவை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள திருச்சி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் விஜய் காந்தி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

    செய்தி: க.சண்முகவடிவேல்



  • Advertisment
    Advertisements
  • Sep 09, 2025 18:30 IST

    செங்கோட்டையனின் எண்ணம் வெற்றி பெறட்டும் - பெரியகுளத்தில் ஓ.பி.எஸ் பேட்டி

    தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனி பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "செங்கோட்டையனின் எண்ணம் வெற்றி பெறட்டும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 'கட்சி ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற எனது கருத்தை செங்கோட்டையன் கூறத் தொடங்கி உள்ளார். நயினார் நாகேந்திரனிடம் எனது செல்போன் எண் உள்ளது. அவர் பேசட்டும்' எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச தயார் என நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

     



  • Sep 09, 2025 17:55 IST

    நெல்லை: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அதிகாரி வீட்டில் இ.டி சோதனை

    நெல்லையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி அதிகாரி சுப்பிரமணியன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மற்றும் மதுரையில் இருந்து 3 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



  • Sep 09, 2025 17:48 IST

    குருபூஜை நடத்த தடை கோரி மனு - தீர்ப்புக்காக ஒத்திவைத்த மதுரை ஐகோர்ட் 

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் ஜெயந்தி உள்ளிட்ட குருபூஜை விழாக்களை நடத்த தடை விதிக்க கோரிய மனு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை பதிவு செய்த மதுரை ஐகோர்ட் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் விழாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 09, 2025 16:57 IST

    சொத்துவரி முறைகேடு வழக்கில் மேலும் 4 பேர் கைது

    மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . கணினி உதவியாளர்கள் உட்பட 4 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 



  • Sep 09, 2025 16:56 IST

    தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் உள்ளிட்ட விழாக்களை நடத்த தடை கோரிய மனு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

    தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் உள்ளிட்ட விழாக்களை நடத்த தடை கோரிய மனு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை பதிவு செய்த ஐகோர்ட் கிளை வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் விழாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 09, 2025 15:48 IST

    "ஏற்காடு எக்ஸ்பிரஸ் தொடர்பாக வலியுறுத்தினேன்” - செங்கோட்டையன் பேட்டி

    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது; உள்துறை அமைச்சரை சந்தித்தபோது, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வருகை தந்தார். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றக்கோரி, ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினேன்; மக்கள் பணி செய்யவும், இயக்கம் வலுப்பெறவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி



  • Sep 09, 2025 15:33 IST

    நான்கு பேர் ஆற்றில் விழுந்து தற்கொலை

    தஞ்சையில் கொடூரம் - 20 கண் பாலத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளனர். இது குறித்து தஞ்சை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Sep 09, 2025 15:31 IST

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக இன்று முதல் செப்.15 வரையிலும், அக்.25 முதல் அக்.31 வரையும் 144 தடை உத்தரவு அமலாகிறது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள், தேவர் குருபூஜை உள்ளிட்டவை வர உள்ள நிலையில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Sep 09, 2025 15:21 IST

    அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடர்பாக அமித் ஷா, நிர்மலா சீதாராமனிடம் பேசினேன் - செங்கோட்டையன்

    அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடர்பாக அமித் ஷா, நிர்மலா சீதாராமனிடம் பேசினேன் என டெல்லியிலிருந்து திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் பேட்டியளித்தார். மேலும் ஆவர் அளித்த பேட்டியில்; "அமித்ஷாவை நான் சந்தித்து பேசிய போது, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வந்தார். ஈரோட்டில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஹரித்வார் செல்வதாக கூறினேன். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது" என தெரிவித்துள்ளார்.



  • Sep 09, 2025 15:04 IST

    விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் மோதிய வழக்கில் தப்பியவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்

    விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் மோதிய வழக்கில் தப்பியவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். கஞ்சா போதையில் 3 இளைஞர்கள், 4 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கில் கந்தவேல் என்பவர் தப்பினார். போலீசார் பிடித்தபோது தப்பிய கந்தவேல் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். போலீஸ் சுட்டதில் காலில் காயம் அடைந்த கந்தவேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டுள்ளார்.



  • Sep 09, 2025 14:42 IST

    செங்கோட்டையன் ஆதரவு எம்.எல்.ஏ எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை செங்கோட்டையன் ஆதரவாளர் பவானி சாகர் தொகுதி எம்.எல்.ஏ பன்னாரி இன்று சந்தித்தார். சேலத்தில் உள்ள இ.பி.எஸ் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.



  • Sep 09, 2025 14:37 IST

    கோவையில் வங்கிக்கடனை ஒரே தவனையில் கட்டியவர் வீட்டில் இ.டி சோதனை

    கோவை மாவட்டம் சுலூர் அருகிலுள்ள செலக்கரைசலில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவரின் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கிக்கடனை ராமச்சந்திரன் ஒரே தவனையில் கட்டியதால் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Sep 09, 2025 12:39 IST

    இ.பி.எஸ் எங்கள் தலைவரை சந்தித்தார்; மற்ற அ.தி.மு.க தலைவர்கள் சந்தித்ததற்கு ஆதாரம் இருக்கா? - வானதி சீனிவாசன்

    எதிர்க்கட்சித்தலைவர் டெல்லிக்கு சென்று எங்கள் தலைவர்களை சந்தித்தார்.கூட்டணி அமைந்துள்ளது. மற்ற அ.தி.மு.க தலைவர்கள் எங்கள் தலைவர்களை சந்தித்தார்கள் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கா? எதாவது ஆதாரபூர்வ செய்தி, எங்கள் கட்சித்தலைவர்கள் வெளியிட்ட தகவல் எதாவது இருக்கிறதா? உங்க பிரேக்கிங் நியூசுக்காக நான் பேச முடியாது என கோவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்



  • Sep 09, 2025 11:00 IST

    நீலகிரியில் காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு

    நீலகிரி: இன்று அதிகாலை பார்வுட் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் (வயது 55) மற்றும் செல்லதுரை (வயது 48) ஆகிய இருவர் தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு சென்றுள்ளனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேயிலை தோட்டத்தில் உலா வந்த காட்டு யானை தாக்கியதில் சம்சுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த செல்லதுரை கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



  • Sep 09, 2025 10:47 IST

    புஸ்லி ஆனந்த் மீது வழக்குப்பதிவு: விஜய் கண்டனம்

    திருச்சியில் புஸ்லி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு விஜய் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


    திமுக அரசு தவெக எழுச்சியைக் கண்டு பயப்படுகிறது.  திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தவெக செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் புஸ்லி ஆனந்த் மீது போட்ட வழக்கையும், தவெக தொண்டர்கள் மீது போட்ட வழக்கையும் திரும்ப பெற வேண்டும். மக்களிடம் செல்வாக்கை இழந்த ஆளுங்கட்சி தவெகவை கண்டு பயத்தின் உச்சத்தில் இருப்பது நிரூபணம் ஆகி இருக்கிறது என  விஜய், அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



  • Sep 09, 2025 10:26 IST

    சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதி

    தென்காசி, பாரதியார் எட்டாம் தெருவில் சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பள்ளிக்குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த கழிவுநீரில் செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் கலப்பக்குளம் பஞ்சாயத்து இடையேயான எல்லைப் பிரச்சனை காரணமாக, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 



  • Sep 09, 2025 09:31 IST

    இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

    இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் காரணத்திற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடை உத்தரவு செப்டம்பர் 15 வரையும், பிறகு அக்டோபர் 25 முதல் அக்டோபர் 31 வரையும் அமலில் இருக்கும். தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் குருபூஜை போன்ற நிகழ்வுகள் வர உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

     



  • Sep 09, 2025 09:30 IST

    கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் யானை தாக்கியதில் மெஹபூப் (38) என்பவர் உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது யானை தாக்கியதில் மெஹபூப் இறந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: