Coimbatore, Madurai, Trichy News Live: நாமக்கல்லில் விஜய் பிரச்சாரத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த்

Coimbatore, Madurai, Trichy News Live- 26 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 26 September 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pussy anana

குமரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

குமரி அருகே குடியிருப்பில் புகுந்த மலைப் பாம்பு

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒரு பெரிய மலைப்பாம்பை, ஒருவர் மிகுந்த துணிச்சலுடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Video: Sun News

  • Sep 26, 2025 22:10 IST

    செல்லாத ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

    கும்பகோணம் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு செல்லாத 500, 1000, 2000, நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனை அறிந்து கோவில் செயல் அலுவலர் உத்தரவின் பேரில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மட்டும் அப்புறப்படுத்தினர்.



  • Sep 26, 2025 20:59 IST

    ரூ.1 கோடி அளவுக்கு மணல் திருட்டு - இ.பி.எஸ்

    கரூர் காவிரிப் படுகையில் நாளொன்றுக்கு ரூ.1 கோடி அளவுக்கு மணல் திருடப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு மீறிய அதிகாரத்தைக் கொடுத்ததால் ஆடிக் கொண்டிருக்கிறார் என எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 26, 2025 20:33 IST

    சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி - இ.பி.எஸ்

    கரூரில் பேசிய இபிஎஸ், சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வோரு வேடம் போடுவார். புதுபுது யுக்தியை கையாள்வர். அத்தனையும் கிரிமினல் எண்ணம் தேர்தல் நடந்தபோது, வெள்ளிக் கொலுசு கொடுக்கிறேன் எனக்கூறிவிட்டு போலி வெள்ளிக் கொலுசு கொடுத்தவர் செந்தில்பாலாஜி என்று கூறினார். 



  • Sep 26, 2025 20:11 IST

    ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன

    திருப்பதிபிரமோற்சவத்திற்காககிருவில்லிப்புதூர்ஆண்டாள்தாயார்சூடிக்கொடுத்தமாலை, கிளி, சிறப்புபூஜைகளுடன்அனுப்பிவைக்கபப்ட்டன. திருப்பதியில்கருடசேவையின்போதுஏழுமலையானுக்குஇந்தமாலை, கிளிஆகியவைசாற்றப்படும்.

     



  • Sep 26, 2025 20:09 IST

    தேனி மாவட்டம் சங்கராபுரம் கருப்பசாமி கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்

    தேனி மாவட்டம் சங்கராபுரம் கருப்பசாமி கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். வரும் அக்டோபர் 1ம் தேதி தனது இட்லி கடை படம் வெளியாவதை ஒட்டி, பெற்றோர், மகன்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.



  • Sep 26, 2025 20:06 IST

    காலாண்டு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் அக்.6ம் தேதி திறக்கப்படும்

    காலாண்டுவிடுமுறைக்குப்பின்பள்ளிகள்அக்டோபர் 6 ஆம்தேதிதிறக்கப்படும். பள்ளிதிறக்கும்நாளிலேயே 1 முதல் 7 வகுப்புகள்வரை 2 ஆம்பருவபாடநூல்களைவழங்கநடவடிக்கைஎடுக்கப்படும். விஜயதசமிநாளில்அரசுதுவக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில்மாணவர்சேர்க்கைமேற்கொள்ளபள்ளிக்கல்வித்துறைஅறிவுறுத்தியுள்ளது.

     



  • Sep 26, 2025 18:45 IST

    நாமக்கல் கொள்முதல் விலை இன்று 20 காசுகள் சரிவு

    நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று 20 காசுகள் சரிந்து, ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



  • Sep 26, 2025 15:44 IST

    251 உணவு கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை

    நெல்லையில் தரமற்ற உணவு பொருட்களை விற்ற 251 கடைகள் மீது உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்தனர். நெல்லை மாவட்டத்தில் கடைகளில் 4 மாதத்தில் ரூ.12.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதத்தில் நெல்லையில் 42 கடைகளுக்கும், தென்காசியில் 38 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.



  • Sep 26, 2025 15:30 IST

    ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோதமாக தங்கிய 31 வங்கதேச நாட்டினருக்கு சிறை தண்டனை

    ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோதமாக தங்கிய 31 வங்கதேச நாட்டினருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்த 125 நாட்களை தண்டனை காலமாக அறிவித்து, தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வழக்கிலும் ஒரு சிறார் உள்ளிட்ட 31 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தது ஒட்டன்சத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Sep 26, 2025 14:02 IST

    நாமக்கல், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்: விஜய் முன்கூட்டியா மக்களைச் சந்திக்க திட்டம் 

    நாளை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள த.வெ.க தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பகுதிகளில் தொண்டர்கள் தொடர்ச்சியாக பரப்புரை வாகனத்தை பின்தொடர்வதால் காலதாமதமாவதால், முன்கூட்டியே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் அருகில் நாளை காலை 8.45 மணியளவில் விஜய் உரை. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் மதியம் 12 மணிக்கு மக்களை சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.



  • Sep 26, 2025 13:08 IST

    மதுரையில் பெண் ஊழியர்களை கழிப்பறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்த  மின் வாரிய ஊழியர் கைது

    மதுரை மாவட்டம், சமயநல்லூர் மின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை கழிப்பறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்த  மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் ராஜராஜேஸ்வரன் (33) கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது அலுவலகத்தில் பணிபுரியும் பல பெண் ஊழியர்களின் வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 26, 2025 12:29 IST

    மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் மரணம்: 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

    மதுரை மாநகர் கோச்சடைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை 2019-ம் ஆண்டு போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் மரணம் அடைந்தார். சிறுவனை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகன் இறப்புக்கு நீதி கேட்டு தந்தை நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



  • Sep 26, 2025 11:56 IST

    கரூரில் விஜய் பரப்புரைக்கு அனுமதி

    கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே இடத்தில் வியாழக்கிழமை எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தது குறிப்பிடத்தக்கது



  • Sep 26, 2025 11:39 IST

    மாணவருக்கு அரிவாள் வெட்டு - சக மாணவர் மீது வழக்கு

    திருநெல்வேலி மாவட்டம் டோனாவூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சக மாணவன் மீது 2 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்குப்பதியப்பட்ட மாணவர் பாளையங்கோட்டையில் உள்ள இளைஞர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்



  • Sep 26, 2025 11:23 IST

    நயினார் நாகேந்திரன் அலுவலக உதவியாளர் மீது வழக்கு

    நெல்லை சுத்தமல்லியில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், மத மோதலை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியார் டேவிட் நிர்மல் துரை என்பவர் ஊழியம் செய்து கொண்டிருந்த போது அதனை தடுத்து மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் அங்கராஜ், அவரது சகோதரர் சங்கரநாராயணன், இந்து முன்னணி நிர்வாகி மணிகண்ட மகாதேவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது



  • Sep 26, 2025 10:52 IST

    ஐகோர்ட் மதுரை அமர்வுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து உடனடியாக நீதிமன்ற பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். உயர்நீதிமன்ற பதிவாளரின் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மற்றும் தமிழக போலீசார் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்



  • Sep 26, 2025 10:22 IST

    அரசுப் பேருந்து சக்கரம் ஏறி கல்லூரி மாணவர் மரணம்

    திருவண்ணாமலை, போளூரில் கல்லூரி செல்வதற்காக பேருந்தில் ஏறிய மாணவர் வெற்றிவேல் தவறி விழுந்ததில் மரணமடைந்தார். தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே மாணவர் வெற்றிவேல் உயிரிழந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 26, 2025 09:38 IST

    கரூரில் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு - விஜய் ஆலோசனை

    கரூரில் நாளை (செப்.27) பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். நாமக்கல்லில் கே.எஸ். திரையரங்கம் அருகே பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



  • Sep 26, 2025 09:35 IST

    ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு

    சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. ஓபிஎஸ்-ஐ சந்தித்ததாக வதந்திகள் பரப்பப்படுகிறது, இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது..

    - ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு



  • Sep 26, 2025 09:33 IST

    ஈச்சர் லாரி மோதி பெண் எஸ்.ஐ. மரணம்

    கோவை சிங்காநல்லூர் அருகே ஈச்சர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் காவல் ஆய்வாளர் பானுமதி (52) உயிரிழந்தார்.

    காமராஜர் சாலையில் அதிகாலை 5 மணியளவில் அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் லாரி மோதி படுகாயம் அடைந்த பானுமதி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



  • Sep 26, 2025 09:10 IST

    தமிழகத்தில் அக்.1 வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (செப்.26) முதல் அக்.1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (செப்.27-ம் தேதி) கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம்



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: