மணப்பாறையில் அனைத்து ரயிலையும் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருச்சி மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் மதிமுகவினர் ரயில் மறியல் அறப்போராட்டம் நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மணப்பாறையில் மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில் இன்று பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ரயிலை மறிக்க சென்றனர். அப்போது ரயில்வே நுழைவாயில் முன்பு தடுத்து நிறுத்திய கூடுதல் துணை கண்காணிப்பாளர் பால் வண்ண கண்ணன், மணப்பாறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் கோபி, ரயில்வே DSP பிரபாகரன் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு ரயில்வே நிலையம் உள்ளே நுழைய முயன்றவற்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பின்னர் மதிமுகவினரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் கடும் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ரயில் நிலையம் உட்புகுந்த அந்தநல்லூர் ஒன்றியத் துணைச் செயலாளர் அல்லூர் கண்ணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வீராங்கனை நா.ரேணுகாதேவி, துவாக்குடி நகரத் துணைச் செயலாளர் துவாக்குடி முனியசாமி, வையம்பட்டி தன்ராஜ் உள்பட சிலர் திண்டுக்கல்லில் இருந்து ரயிலில் வந்து மதிமுக கொடி அசைத்து மணப்பாறைக்கு அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மணப்பாறை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் மதிமுக வினர்க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நுழைவாயில் நின்று கோஷம் எழுப்பினர். பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர், இந்த ரயில் மறியல் போராட்டத்தில், மணப்பாறை நகரச்செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, மணப்பாறை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆ.துரைராஜ், மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலாளர் ப.சுப்ரமணியன், திருச்சி துவாக்குடி நகரச்செயலாளர் மோகன் பெரியகருப்பன், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.தங்கவேலு, அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் சாத்தனூர் ஆ.சுரேஸ், வையம்பட்டி ஒன்றியச் செயலாளர் வின்சென்ட் வேதராஜ், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பீட்டர், திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.திருமாவளவன், மருங்காபுரி வடக்கு முன்னாள் ஒன்றியச் செயலாளர் டி.வி.எஸ்.பொன்னுச்சாமி உள்பட 100-க்கும் மதிமுகவினர் திரளாக ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் விடுத்து ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இந்த ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக நெல்லையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் சிறிது நேரம் தாமதமாக சென்றது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil