20-ம் தேதி மதிமுக செயற்குழு: துரை வைகோவுக்கு பதவி உறுதி

Tamilnadu News Update : மதிமுகவில் பொதுச்செயலாளர் வைகோ மகனுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று தென் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிமுகவில் பொதுச்செயலாளர் வைகோ மகனுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று தென் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகன் துரை வைகோவுக்கு அரசியல் தேவையில்லை என்று சமீப காலமாக கூறி வரும் நிலையில் அவருக்கு கட்சியில் துணைப்பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி தொண்டர்களும் மாவட்ட செய்லாளர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், துரை வைகோவுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று தென் மாவட்டங்களில் ,தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் சமீப காலமாக மதிமுகவின் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வைகோ படத்துடன் துரை வைகோ படமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கட்சி தொண்டர்கள் கட்சி தொடர்பாக வைகோவை சந்தித்த முடியாத சூழலில் பலரும் துரை வைகோவை சந்தித்து ஆலோசனை பெற்று வருகினறனர். இதன் காரணமாக துரை வைகோ கட்சியில் பொறுப்புகளை கையில் எடுத்து கட்சி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று கட்சியினர் பலரும் கூறி வருகினறனர்.

இதற்கு முன்னோட்டமாக துரை வைகோவுக்கு பதவி வழங்க வேண்டும் என்று தென் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் குருவிக்குளம் உள்ளாராட்டி ஒன்றியத்தில் மதிமுகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டு அனைத்து மதிமுக வேட்பாளர்களையும் வெற்றிபெற வைத்து துறை வைகோவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 56 ஆண்டுகள் பொதுவாழ்வில் பணியாற்றி வரும் மதிமுக பொதுக்செயலாளர் வைகோவின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் அவரது மகன் துரை வைகோவிற்கு மதிமுக துணைப்பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மதிமுக மாவட்ட நிர்வாகிகள் செயற்குழுகூட்டத்தில் துரை வைகோவிற்கு பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பலரும் வைத்துள்ள கோரிக்கையை ஏற்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கலத்தின் மாநில அளவிலான பொறுப்பை துரை வைகோ அவர்களுக்கு வழங்க கோரி இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்த தீாமாளத்தை கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.ஆனால் சமீப காலங்களாக வைகோ தனது மகனுக்கு அரசியல் தேவையில்லை என்று கூறி வரும் நிலையில், தனக்கு தெரியாமல் தனது மகனை கட்சி நிகழ்ச்சிகளுக்கு நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச்சென்றுள்ளனர். ஆனாலும் மதிமுக ஜனநாயக கட்சி என்றும் எதுவாக இருந்தாலும் தொண்டர்களின் முடிவுதான் என்று வைகோ அப்போது தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது துரை வைகோவிற்கு பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று பல மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளர். இதனால் வைகோ அடுத்து என்ற முடிவு எடுப்பார் என்பது குறித்து கட்சி நிர்வாகிளிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வரும் 20-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து வலியுறுத்தப்படும் என்று குறிப்பிட்டு்ளளனர். ஆனால் தனது மகனுக்கு அரசியல் வேண்டாம் என்று கூறி வரும் வைகோ இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் மறுப்பு தெரிவித்தாலும் கட்சி நிர்வாகிகள் பேசி சமாதானம் செய்து துரை வைகோவிற்கு பதவி வழங்க முழு ஆதரவு அளிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. .

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu mdmk vaiko news durai vaiko new post in mdmk

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com