'உங்க அரிப்பு அதுதான்': செய்தியாளர்கள் மீது பாய்ந்த வைகோ

இரண்டாம் உலக யுத்தத்தில் ரஷியா போர் களங்களில் வெற்றி வருவதற்கு முழுமுதல் காரணம் உக்ரைன் வீரர்கள். அவர்கள் அஞ்சாதவர்கள், ஸ்பார்டா வீரர்களைப் போன்றவர்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தில் ரஷியா போர் களங்களில் வெற்றி வருவதற்கு முழுமுதல் காரணம் உக்ரைன் வீரர்கள். அவர்கள் அஞ்சாதவர்கள், ஸ்பார்டா வீரர்களைப் போன்றவர்கள்.

author-image
WebDesk
New Update
Vaiko press meet

சமீபத்தில் மதிமுகவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட மல்லை சத்யா காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிய வைகோ, எதையாவது வாங்கி பத்திரிக்கைகளில் போட வேண்டும். உங்க அரிப்பு அதுதான் என்று கூறியுள்ளார்.

Advertisment

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, உக்கரமாக நடைபெறுகிற உக்ரைன் யுத்தகளத்திற்கு அனுபவுகிறார்கள். உக்ரைன் அதிபர் ஜலன்ஸ்கி. கோலியாத் தாவீதைப் போல அந்த சமர்க்களத்தில் உலகத்தின் தலையாய அணுவாய்த வல்லரசாகிய ரஷியாவை எதிர்த்து ஆண்டு கணக்கிலே போராடி வருகிறார். இரண்டாம் உலக யுத்தத்தில் ரஷியா போர் களங்களில் வெற்றி வருவதற்கு முழுமுதல் காரணம் உக்ரைன் வீரர்கள். அவர்கள் அஞ்சாதவர்கள், ஸ்பார்டா வீரர்களைப் போன்றவர்கள்.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் கிஷோர் சரவணன் உள்ளிட்ட தமிழக மாணவர்களை, இந்திய மாணவர்களை யுத்தகளத்திற்கு அனுப்பக்கூடாது என்று. மறுமலர்ச்சி திருச்சி எம்பி, 68 தலைவர்களிடம், திமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அகிலேஷ் யாதவ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அனைத்து கட்சிகளிடம், இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளிடமும், 68 எம்பிக்களிடம் கையெழுத்து வாங்கி, பிரதமரை நேரில் சந்தித்து, அந்த முறையிட்டு மனுவை கொடுத்திருக்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்திருக்கிறார்.

இன்று வரை எந்த விதமான எதிர்விளைவையும் அது ஏற்படுத்தாமல், ஹிட்லரைப் போல ரஷியா அதிபர் புடின் செயல்பட்டு கொண்டிருக்கிறார். ஆகவே நேற்று முன் தினம், கிஷோர் சரவணனுடைய சிறிய தாயாரும் உடன்பிறந்த தம்பியும் என்னை வந்து பார்த்தார்கள். அவனை வாகனத்தே ஏற்றிவைத்திருக்கிறார்களாம். உக்ரைனுக்கு அனுப்பப்போகிறார்களாம். அவனை இன்னும் உயிரோடு நாங்கள் பார்க்க முடியாதே என்று என் வீட்டுக்கு வந்து கதை அழுதார்கள். நான் அந்த கண்ணீரை மனதிலே தாங்கிக் கொள்ள முடியாமல்தான்.

Advertisment
Advertisements

நான் செல்லும் இடங்களில் நாம் எடுக்குற முயற்சியைச் சொல்லிக்கொடுகிறோம். அந்த முயற்சி வெற்றிபெற்று சரவணன் உள்ளிட்ட தமிழக மாணவர்களும், இந்திய மாணவர்களும் பத்திரமாக நாடு வந்து சேர வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் இயற்கை அன்னையை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மல்லை சத்யா தனி பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் சொல்ல விரும்பவில்லை. பதில் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் விடமாட்டீங்களா? எப்படி கேட்டாலும், அதையே பதில்தான் சொல்கிறேன். எதையாவது வாங்கி பத்திரிக்கையில் போட வேண்டும். அதுதான் உங்கள் அரிப்பு என்று கூறியுள்ளார்.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: