அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவிட வளாகம் அறிவிக்கப்பட்ட இடுகாட்டுப்பகுதி என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் பேனா அமைக்கும் திட்டத்திற்கு பல தரப்பினரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் மெரினா நினைவிடங்கள் மற்றும் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழங்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ராம்குமார் ஆதித்யன் என்பவர் சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகள் அமைக்கப்பட்டதில் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் இருக்கிறதா என்தை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுக்கு தற்போது பதில் அளித்துள்ள தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், 2011-ம் ஆண்டு அமலுக்கு வந்த கடற்கரை ஒருங்காற்று மண்டல அறிவிக்கைக்கு முன்பே அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுவிட்டது.
அதேபோல் மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள இடம் கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் 2-க்குள் (CRZ II)வருகிறது. ஒழுங்காற்று மண்டலம் 2-க்குள் நினைவிடங்கள் அமைப்பது விதிகளைின்படி தடையில்லை. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம், கலைஞர் கருணாநிதியின் உடலை அறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி அளித்தது என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil