தமிழகத்தில், வரும் 21 முதல் 23ம் தேதி வரை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குளிர்காலம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருந்தாலும், இன்னும் பல இடங்களில், குளிர்காலத்தின் தொடக்கம் என்பது போல், பனி படர்ந்த நிலை உள்ளது. இதன் காரணமாக காலை 7 வரையுமே பல இடங்களில் அருகில் சென்றுகொண்டிருக்கும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பணியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இரசு நேரங்களை விட அதிகாலையில் தான் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் காலையில், வெளியில் செல்பவர்கள் சற்று சிரமத்த எதிர்கொள்கின்றனர்.
அடுத்து கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், தற்போது பனியும் வெப்பமும் கலந்த நிலை தான் இருந்து வருகிறது. இரவில் தொடங்கி காலை 8 மணி வரை பணியின் தாக்கம் இருந்தாலும் அதன்பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கோடை காலதம் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்கள் இருந்தாலும், அந்த காலக்கட்டத்தில் இருக்கும் வெயின் தாக்கம் போன்று தற்போது வெப்பநிலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரவில் பணி தாக்கம், பகலில் வெயில் தாக்கம் என் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதில் நேற்று கரூர் மாவட்டத்தில், 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நீடித்த நிலையில், பல இடங்கில் இதேபோன்ற ஒரு நிலையான வெப்பநிலையே நீடித்து வருகிறது. இதனிடையே சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் நாட்களில், வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை காலம் வரும்போது அதிகபட்ச வெப்பநிலை சீராக உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 மற்றும் 2014-க்கு இடையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இரவு நேர வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இரவு வெப்பநிலை சாதாரணமாக 20 டிகிரி செல்சியசுக்கு மேல் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.