காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், திருச்சி காவேரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், திருச்சி காவேரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
New Update
Mettur Dam

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நடப்பாண்டில் 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, அணையில் இருந்து உபரி நீர் 16 கண் பாலம்வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் 30,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்வதால் காவேரி ஆற்றில் கூடுதலாக நீர்வரத்து ஏற்படலாம்.

Advertisment

அதேநேரம், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தற்போதைய நிலவரப்படி 14,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இன்று நள்ளிரவுக்கு மேல் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் கூடுதலாக ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் என 35,000 கனஅடி வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், திருச்சி காவேரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், சலவைத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை அழைத்து செல்லக்கூடாது, பொதுமக்கள் செல்பி எடுக்க தடை விதித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: