Advertisment

அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு... மோடியின் மிரட்டல் இங்கு செல்லாது : அன்பில் மகேஷ் பேச்சு

மோடி மிரட்டினால் அடிபணிய இது அ.தி.மு.க அல்ல. அண்ணாவின் தி.மு.க. அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு.

author-image
WebDesk
New Update
Anbil Mahesh salem DMK

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மாவட்டம், மணப்பாறை திண்டுக்கல் மெயின் சாலையில் மாட்டுச்சந்தை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கின்றது. பிரதமர் மோடி இப்போது தான் அவ்வபோது வந்து சென்று கொண்டிருக்கிறார். புயல், வெள்ளம் தாக்கிய போது, மீனவர்கள் இறந்த போது, நீட் தேர்வால் 22 மாணவ- மாணவிகள் இறந்த போது வராத மோடி ஏன் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் வராத மோடி இப்படி எதற்கும் வராத மோடி. இப்போது அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றால் தேர்தல் வந்து விட்டது என்று அர்த்தம்.

அழிப்பேன், ஒழிப்பேன் என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் எங்கள் முதல்வர் எழுதிய கடிதத்தில் ஆளும் கட்சியாக இருந்த போது ஏதும் செய்யவில்லை. எதிர்கட்சியாக இருக்கும் போதாவது ஏதாவது செய்வீர்களாக என்று நாகரீகமாக கேட்டிருந்தார். மோடி மிரட்டினால் அடிபணிய இது அ.தி.மு.க அல்ல. அண்ணாவின் தி.மு.க. அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு. மோடியின் மிரட்டல் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது என்று கூறியுள்ளார்.

கலைஞரின் சிலையை திறந்து வைத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறப் போகிறது. காஷ்மீர், டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு இப்படி இந்தியா கூட்டணி அமைந்து விட்டது. தமிழ்நாடு தான் இதற்கு வழிகாட்டுகிறது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி வரப்போகிறது என்று கூறினார்.

இந்நிகழ்வில்  திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன்,  சபியுல்லா மாவட்ட கழக அவை தலைவர் கோவிந்தராஜ்   மாவட்ட பொருளாளர் குணசேகரன் மணப்பாறை நகரக் கழகச் செயலாளர் மு.மா. செல்வம் மணப்பாறை நகர மன்ற தலைவர்

கீதாமைக்கேல்ராஜ், மணப்பாறை ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, மணப்பாறை ஒன்றிய குழு தலைவர் அமிர்தவல்லி ராமசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil  

Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment