அரசாணை 243-ஐ நீக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பு இன்று ஒருநாள் மாவட்ட தலைநகரங்களில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த போராட்டம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் டிட்டோஜாக் என்ற கூட்டு இயக்கத்தின் சார்பில், தங்களது கோரிக்களை வலியுத்தி அவ்வப்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து அவ்வப்போது அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அரசாணை 243-ஐ நீக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைளை வலியுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது.
அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பான, டிட்டோஜாக் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் கோரிக்கைளை பார்த்து பரிசீலிப்போம். ஆசிரியர்களை அழைத்து பேசி, எந்தெந்த கோரிக்களை செய்ய முடியுமோ அதை செய்வோம். காலதாமதாகும் கோரிக்களை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருப்போம் என்று கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறுகையில், ஆசிரியர் சங்கங்களின் உணர்வுகளை மதிக்கிறோம். ஒவ்வொரு முறை போராட்டத்தில் ஈடுபடும்போதும், அவர்களை அழைத்து பேசி சமாதானப்படுத்துவோம். இந்த முறை 31 அம்ச கோரிக்கைளை முன்வைத்துள்ளனர். இதில் 12 விதமாக கோரிக்கைளை எப்படி நிறைவேற்றுவோம் என்பதை எழுத்துப்பூர்வமாக கொடுத்துவிட்டோம்.
தொடக்க கல்வி ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் அவர்கள் வைக்கும் கோரிக்கைளை பார்த்து பரிசீலிப்போம். செய்யாமல் ஓடும் கூட்டம் நாங்கள் கிடையாது. ஆசிரியர்களை அழைத்து பேசி, செய்ய முடியும் கோரிக்கைளை செய்துவிடுவோம் காலதாமதாகும் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
31 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, 1287 பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் செயல்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.