தொகுதி மேம்பாட்டு நிதியை சட்டமன்ற உறுப்பினர்களே தொகுதிக்கு செலவு செய்யலாம் என்று, சட்டப்பேரவையில் அவை முனைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. இதில கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பான அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், கேள்வி நேரத்திற்கு பின்பு அனுமதி தருகிறேன் என்று சபாநாயகர் தெரிவித்திருந்தார். ஆனால் இதை எதிர்கட்சியினர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவையில் பெரும் குழப்பம் நீடித்தது. 8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்துள்ளீர்கள், இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
சபாநாயகரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில், வெளியில் இருந்து தங்களது எதிர்ப்பு முழக்கங்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய, அவை முனைவர் துரைமுருகன், தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ3 கோடியில், ரூ2 கோடியை சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி செலவிடவும், மீதமுள்ள ஒரு கோடியை அரசு பரிந்துரைக்கும் திட்டத்திற்கு செலவிட வேண்டி இருந்தது.
தற்போது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ 3 கோடியையும், சட்டமன்ற உறுப்பினர்களை தொகுதி வளர்ச்சிக்கு, நேரடியான திட்டங்களுக்கு செலவிடலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜி.எஸ்.டியை நீக்குவதற்கு, முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ள துரைமுருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் உடல்நலத்திற்கு பணம் தேவைப்படுவதாக முதல்வரிடம் கூறியிருப்பதாகவும், முதல்வர் அது குறித்து பேசிவிட்டு சொல்வதாக கூறினார் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டது குறித்து பேசிய துரைமுருகன், பிரச்சனையை பற்றி அவையில் பேச அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் கருப்பு சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு அப்படியே கிளம்பிவிடுகின்றனர். விளம்பரத்திற்காகவே அதிமுகவினர் இவ்வாறு அவையில் விதிகளுக்கு முரணாக நடந்துகொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“