இபிஎஸ் எப்போதாவது முல்லைப் பெரியாறு அணையை நேரில் பார்த்தாரா? துரைமுருகன் கேள்வி

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், அதிமுக பொதுப்பணித்துரை அமைச்சர் முல்லை பெரியாறு அணையை பார்த்துள்ளார் என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Mullai Periyaru Dam Issue Update : தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியார் அணையில் இருந்து விதியை மீறி கேரளா பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 9-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முல்லை பெரியாறு விவகாரத்தில் அதிமுக போராட்ட அறிவிப்பு குறித்து கேட்டபோது,  கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் முல்லை பெரியாறு அணையை எப்போதாவது நேரில் சென்று பார்த்தாரா? என்பதற்கு பதில் சொல்லிவிட்டு போராட்டம் நடத்தட்டும் என கூறியுள்ளார்ஃ.

மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்துகொண்டிருப்பது குறித்து கேட்டபோது, பெரியாறு அணையை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்று கூறினார். இந்த சந்திப்பின்போது  அமைச்சர்கள் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், தி.மு.க. நிர்வாகிகள் இளைஞரணி ராஜா, வாடிப்பட்டி பால்பாண்டி, திருப்பரங்குன்றம் ஒன்றிய சேர்மன் வேட்டையன் உள்பட பலர் இருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu minister duraimurugan say about mullai periyar dam issue

Next Story
நீட் தேர்வில் சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள் : உதவியது இ-பாக்ஸ் பயிற்சி வகுப்புகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com