தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக ஆட்சியில், பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறியது போல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியில் தற்போது திமுக களமிறங்கியுள்ளது. இதன் முதல்படியாக அமைச்சர் மனோ தங்கராஜ் சோகோ ஐடி துறையில் உள்ள தொழில் வல்லூநர்களை சந்தித்து தமிழக இளைஞர்களுக்காக வெலை வாய்ப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். அந்த வகையில் இன்று சோகோதொழில்நுட்ப நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவை சந்தித்து தமிழகத்தில் இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனோ தங்கராஜ், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து Zoho ஐடி நிறுவனத்தின் CEO திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மனோ தங்கராஜ், தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில், தென்காசியில் தொழிலதிபர் ஸ்ரீதர் வேப்புவை சந்தித்துள்ளார். தென்காசி அருகே மத்தாலம்பாறை என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு, தனது அலுவலகத்தை தனது சொந்த கிராமத்தில் அமைத்து அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்பை ஏற்படுத்தி கொடுத்து தனது சோகோநிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது அவரை சந்தித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், இளைஞர்கள் வேலை வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தொடர்பாக தொழிலதிபர்கள் பலரையும் அமைச்சர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் மூலம், தமிழகத்தில் ஒரு மெகா வேலை வாய்ப்பு முகாமை நடத்தில் முதல்வர் ஸ்டாலின் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோகத்துடன் அமைச்சர் இந்த சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீதர் வேம்புவை அவர் சந்தித்த்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த பதிவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பாஜக சார்பான தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவை அமைச்சர் சந்தித்திருக்க கூடாது என்று திமுகவை சேர்ந்த சிலரும் திராவிட இயக்கத்தை சேர்ந்த சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்களில் அரசியல் பார்க்க்க்கூடாது என்றும், இளைஞர்களின் வேலைவாய்ப்புதான் முக்கியம் என்றும், பலர் இந்த சந்திப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சரின் இந்த நடவடிக்கை தொடர வேண்டும் என்று இளைஞர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil