இஸ்ரோ தலைவர் சிவனுடன் தமிழக அமைச்சர் சந்திப்பு: குலசேகரபட்டினம் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை

Tamilnadu News : கேரளாவுக்கு வருகை தந்த இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து பேசினார்.

தனிப்பட்ட பயணமான கேரளா வந்திருந்த இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து பேசியுள்ளார்.

குறைந்த செலவில் ராக்கெட் தயாரித்து விண்ணுக்கு அனுப்புவதில் முதல் நிலையில் உள்ள இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. மேலும் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று இஸ்ரோ யோசனை தெரிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தனிப்பட்ட பயணமாக கேரளா வந்திருந்த இஸ்ரோ தலைவர் சிவன் – ஐ தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கன்னியாகுமரி சர்க்யூட் அவுஸில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் இஸ்ரோ மூலம் தென் தமிழகத்தில் வேலை வாய்ப்பை பெருமளவில் உருவாக்க வேண்டுகொள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.,

மேலும் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம்  குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டத்தை துரிதகதியில் செயல்படுத்தவும், ராக்கெட் உதிரி பாக தொழிற்சாலைகளை  விரைந்து அமைக்கவும் தமிழக முதல்வரின் சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu minister mano thangaraj meet isro head shivan in kanniyakumari

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com