த.இ.தாகூர்
ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்ட செய்தி வெளியான அந்த நொடிகளில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைப் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது அவரிடம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் எழுப்பிய கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள்.
ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜாபர் சாதிக் கைது வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வரை பொருத்தமட்டில், எந்த குற்றத்தில் யார் ஈடுபட்டாலும், எந்த வித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்காது. கஞ்சா போன்ற போதை பழக்கத்தை ஒழிப்பதற்காக பல்வேறு வகையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது
ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு ஒன்றிய அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்படுவதும் தொடர்ந்து நிரூபிக்கின்ற விதத்தில் அவர்களின் செயல்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் பணத்தை மோசடி செய்து வைத்திருக்கக் கூடிய பா.ஜ.க, ஆர் எஸ் எஸ், அதனை சார்ந்த அமைப்புகள் மீதோ, நிர்வாகிகள் மீதோ இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனநாயகத்தை படுகுழியில் கொண்டு செல்வதற்கான மிகப் பெரிய எடுத்துக்காட்டாக பா.ஜ.க ஆட்சியின் செயல்கள் அமைந்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“