Tamilnadu News Update : கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டவர் மனோ தங்கராஜ். இவர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் இயங்கி வருகிறார். கன்னியாகுமரி- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை இவரது பத்மநாபபுரம் தொகுதி வழியே பயணிக்கிறது.
Advertisment
இந்த சாலை பணிகள் மிக மோசமாக நடந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து அமைச்சருக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அந்த சாலையில் பயணித்த அமைச்சர் மனோ தங்கராஜ் அங்கு பணியை கண்காணித்துக் கொண்டிருந்த காண்ட்ராக்டரை நேரில் சந்தித்தார். அப்போது பணியில் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து வரும் புகார்கள் குறித்து நேரில் கேட்டார்.
அப்போது சாலையை தோண்டி பார்ப்போமா? மோசமாக இருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்ய வேண்டி இருக்கும்' என நேரடியாக கான்ட்ராக்டரிடம் எச்சரிக்கை செய்தார் அமைச்சர். இந்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது
Advertisment
Advertisements
அதன்பிறகு காண்ட்ராக்டர், 'தரமான பணி நடைபெறும்' என உறுதி கொடுத்ததை தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil