மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மூர்த்தி, நாம் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்காக இந்த சமூதாயத்தினர் 5000-10000 பேர் பலியாகியுள்ளனர். இதை நீங்கள் தான் இந்த நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருப்பவர் மூர்த்தி. இவர், தமிழக அமைச்சரவையில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருப்பவர் மூர்த்தி. இவர், மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையில் படித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள முக்குலத்து மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இதை நான் சொல்கிறேன். பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் தெளிவாக தெரிஞ்சிக்கோங்க. நீங்க படிக்கிறீங்க, இன்னைக்கு 4 பேர் செத்துப்போனான், 2 பேர் செத்துப்போனான், அதுக்கு ஒரு பெரிய இது பண்றாங்க. சுதந்திரத்திற்காக இந்த சமூதாயம், 5000-10000 பேர் செத்து இருக்கிறார்கள் என்பதை நீங்கள் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும்.
அது வருகிறபோது அந்த வரலாறைகளை எல்லாம் இந்த நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களிடம் நான் தெளிவுபடுத்துகிறேன். அழகர்கோயிலாக இருந்தாலும் திருமோகூர் கோயிலாக இருந்தாலும் ஆங்கிலேயர்களுடைய பெரிய படையெடுப்பில் கொள்ளையடித்து செல்லுகிற போது, இந்த சமுதாயம் தான் முன்னுக்கு நின்று ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் இறந்திருக்கிறான். இந்த வரலாறு இன்றைக்கு மறைக்கப்பட்டு இருக்கிறது.
உசிலம்பட்டி பக்கத்துல 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாங்கனு சொன்னால் கூட அதுவும் மறைக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் தொழில்துறையில் நம்மவர்கள் முன்னிலையில், இருந்தாலும் கூட படிப்பறிவில் அன்றைக்கு பின்தங்கி இருந்த காரணத்தினால், நம்முடைய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் பார்க்கிற போது படிப்படியாக அரசு வேலைவாய்ப்புகளில் நீங்கள் வந்து கொண்டு இருப்பதை மனதார பாராட்டுகிறேன் என்று அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார்.
ஒரு அமைச்சர் பொறுக்கித்தனதமான பேசுரது திமுக தலைமைக்கு தெரியுமா ?
— P.GOPI B.E(Mech)🧑🔧 (@er_gopitweet) January 1, 2025
நாய்க்கர் ஆட்சில கொல்லப்பட்டோம், நசுக்கப்பட்டோம்-னு கருணாஸ் சொன்னது பொய்யா ?#Moorthi #DMK @mkstalin @tnpoliceoffl pic.twitter.com/0JPon0KjIG
இந்த பேச்சு தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூகநீதி பேசும் தி.மு.க.வில் ஒரு அமைச்சர் பேசியுள்ள இந்த சர்ச்சை பேச்சு குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.