தமிழினத் தலைவர், மொழியையும் மக்களையும் உயிராக நேசித்த கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவை போற்றும் வகையில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைதிப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேரணி வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு, அவைத் தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியம் தலைமையில், வண்டியூர் ரிங் ரோடு பகுதியில் இருந்து தொடங்கி, டோல்கேட் அருகே மஸ்தான்பட்டி பகுதியில் உள்ள தலைவர் கலைஞரின் வெண்கல சிலை வரை நடைபெற உள்ளது. பேரணி முடிவில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதிப் பேரணியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்டம், பேரூர் தி.மு.க நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலிருந்தும் பெருமளவில் கழகத்தினர் பங்கேற்குமாறு, அமைச்சர் மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்