தமிழக சட்டப்பேரவயைில் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் முத்துசாமி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழ்நிலை தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் கடந்த ஜூன் 20-ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதில் கடந்த சில தினங்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி எதிர்கட்சினரான அதிமுகவினர் கருப்பு உடையில் சட்டபைக்கு வந்த்தும், சபாநாயகர் எங்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனிடையே பேரவை கூட்டத்தின் கடைசி நாளான இன்று, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் முத்துசாமி, 1937 தமிழ்நாடு மதுவிலக்கு சடடத்தை திருத்தம் செய்யும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக கடுமையான தண்டனை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இனி கள்ளச்சாராயம் விற்பனை செய்தால், ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன், ரூ10 லட்சம் அபராதம், விதிக்கப்படும் என்ற தெரிவித்துள்ளார். இதனையடுத்து மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர்கள ஏற்றுக்கொண்ட நிலையில். பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக கொண்டுவர முடியுமா என்பதை சிந்தித்து பாருங்கள். பூரண மதுவிலக்கை கொண்டு வருவதில் அரசுக்கு விருப்பம் உள்ளது. ஆனால் தற்போது அதற்கான சூழல் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஒரு கடையை மூடினால் மற்றொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வர வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“