Advertisment

ஆளுனரால் தாமதம்; தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவிப்பு: அமைச்சர் பொன்முடி புகார்

தமிழகத்தில் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் தொடர்பு கொண்டு அந்த கல்லூரிகளின் கல்வி அமைப்புகளை மாற்றி இருக்கிறோம்.

author-image
WebDesk
Jun 08, 2023 20:19 IST
RN Ravi POnmudi

அமைச்சர் பொன்முடி - ஆளுனர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் கல்லூரி படிப்பை முடித்த சுமார் 9 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாத நிலையில் இருப்பதற்கு ஆளுனர் தான் காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் செய்தியளார்களை சந்தித்த அவர் கூறுகையில்,

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது, அதற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த வரும் 1,87,639 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்ற ஆண்டை விட இந்தாண்டு 18,610 பேர் அதிகம் விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வந்தபிறகு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கும். ஜூலை 2ந்தேதியில் இருந்து கவுன்சிலிங் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் தொடர்பு கொண்டு அந்த கல்லூரிகளின் கல்வி அமைப்புகளை மாற்றி இருக்கிறோம். இன்னும் அதிகமாக இதை இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர்கூறியுள்ளார். அந்த அடிப்படையில் தான் இன்று பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரவும் மாணவர்களிடையே ஆர்வம் உள்ளது.

பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என்று விரும்பும் கவர்னர், தமிழ்நாட்டில் உள்ள தமிழறிஞர்கள், முன்னாள் துணைவேந்தர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க விரும்புவதில்லை. இதன் காரணமாகவே பட்டமளிப்பு விழா நடத்த தாமதம் ஏற்படுகிறது. இதனால் கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருக்கின்றனர். இதற்கு காரணம் தமிழக அரசு கிடையாது.

கோவை பாரதியார் பல்கலை. துணை வேந்தரை தேர்வு செய்ய கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூவர் குழுவை அரசு அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. சார்பில் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என கவர்னர் நிர்பந்திக்கிறார். அப்படி ஒரு விதியே இல்லை. ஆனால் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழு இன்னும் அமைக்கப்படவில்லை என கவர்னர் ஆர்.என். ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறான ஒன்று. கவர்னர் எந்த தேதி கேட்டாலும், அதை நாங்கள் கொடுக்கிறோம். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு கவர்னர் முன்வர வேண்டும். அதற்கு உயர்கல்வித்துறை உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Ponmudi #Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment