Advertisment

கருப்பு சிவப்பில் இருந்து காவிக்கு மாறிய சேகர்பாபு: போட்டோஸ் லீக் செய்த அர்ஜுன் சம்பத்

Tamilnadu News Update : அமைச்சர் சேகர்பாபு, நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்

author-image
WebDesk
New Update
கருப்பு சிவப்பில் இருந்து காவிக்கு மாறிய சேகர்பாபு: போட்டோஸ் லீக் செய்த அர்ஜுன் சம்பத்

Tamilnadu News Update : பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வரும் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில்,  கனகசபை மீது ஏறி பக்கதர்கள் தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். ஆனால் தற்போது இந்த தடை உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவின் பேரில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், இந்த கோவில் சட்டவிதிப்படி தீட்சிதர்களால் நிர்வாகம் செய்யப்டுகிறதா என்பதை ஆய்வு செய்யும் வகையில், தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நியமிக்கப்பட்ட கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி, தனது குழுக்களுடன் கோவிலை ஆய்வு செய்ய தயார் நிலையில் இருந்துள்ளார்.

இந்த ஆய்வுக்காக தீட்சிதர்கள் போதிய ஆவணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்யப்பட்டது. ஆனால் இந்த ஆய்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிர்வாகம் தொடர்பாக நீங்கள் கேள்வி கேட்க கூடாது இது உச்சநீதிமன்றத்தில் எதிரானது என்று கூறி இந்து சமய அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று காலை திடீரென சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, தீட்சிதர்கள் தங்களது நிலைபாடு குறித்து தெரிவித்தனர். அரசின் செயல்பாடு இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்து நாங்களும் எடுத்துரைத்தோம். விரைவில் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு ஏற்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு, நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த பதிவில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயிலில் இன்று (06.06.2022), கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்து, அத்திருக்கோயில் தீட்சிதர்களிடம் கலந்துரையாடினோம். உடன் கூடுதல் ஆணையர் திரு.கண்ணன் என்று பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இப்பல்லாம்  அமைச்சர் சேகர்பாவு அண்ணன் கருப்பு, சிவப்பு வேஷ்டியை விட காவிதான் உடுத்துகிறார்! இனி கருஞ்சட்டை கயவர்களிடம் இருப்பதை விட காவி உடுத்தி புண்ணியம் தேடிக்கொள்வதே சிறந்தது என லேட்டாக புரிந்துள்ளது! புரிந்தால் சரி! ஆனால் கடவுளை இழித்து பேசும் இழிபிறவிகள் மீது நடவடிக்கை எப்போது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arjun Sampath Minister P K Sekar Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment