/tamil-ie/media/media_files/uploads/2023/01/Sekar-babu.jpg)
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் முதல் முறையாக சிவராத்திரி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் சென்னை மயிலாப்பூர் கபாளீஸ்வரர் கோவில் மற்றும் ஏனைய சிவாலயங்களில் சிவராத்திரி நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள கபாளீஸ்வரர் திருக்கோவில், தஞ்சை பெரியகோவில், திருவண்ணாமலை, நெல்லையப்பர் கோவில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ஆகிய 5 கோவில்களில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/image-580.png)
அந்த வகையில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சார்பாக அக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் நிலத்தில் சிவராத்திரி நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆணையாளர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/01/image-581.png)
அப்போது நிகழ்ச்சி மேடைகள் அமைய உள்ள இடம், அதே பகுதியில் யானை குளிப்பதற்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி, அங்கிருந்த கோவில் கிணறையும் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் வரும் 24"ஆம் தேதி 5 கோவில் செயல் அலுவலர்கள், ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.