மின்சாரத் துறையின் சார்பில் செய்யப்படும் கொள் முதலில் எந்தத் தலையீடும் இல்லை. எந்த தவறும் நடக்கவில்லை" என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் ₹9.67 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும் மாதிரி பள்ளி விடுதி கட்டிடம் அமைய உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ரூ9.67 கோடி மதிப்பில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியை பொருத்தவரை ஏறத்தாழ ரூ935 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்று அந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு செய்ய இருக்கிறோம். மேலும் கோவையின் வளர்ச்சிக்காக கடந்த முறை கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர், கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலை அமைப்பதற்காக ரூ200 கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். சாலைகள் அமைப்பதற்கான சாலைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விரைவில் அரசின் ஒப்புதலை பெற்று அந்தப் பணிகளும் தொடங்க இருக்கிறது.
கோவைக்கு வருக தந்த முதலமைச்சர், ஏற்கனவே தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போர்க்கால அடிப்படையில் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சாலை அமைப்பதற்கான பணிகளின் ஒப்புதல் வருவதற்கு முன்பே பாதாள சாக்கடை பணிகள் விரைவாக முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் சாலைகள் போடாமல் விட்டதால் இப்போது சாலைகள் அமைப்பதற்கான கோரிக்கை வருகிறது. அந்தக் கோரிக்கைகளை முதலமைச்சர் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.
மின்சாரத் துறையின் சார்பில் கொள்முதல் செய்யப்படுகின்ற அனைத்து உபகரணங்களும் முறையாக ஆன்லைன் மூலமாக டெண்டர் விடப்படுகிறது. அதற்காக ஒரு குழு இருக்கிறது. அந்த குழு தான் விலைப்பட்டியலை நிர்ணயம் செய்து, விலை ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்பதை தீர்மானித்து அதற்கான உத்தரவுகளை வழங்குகிறது. கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது. இதில் தலையீடுகள் ஏதுமில்லை என்று கூறியுள்ளார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“