scorecardresearch

அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கெடு: ‘ரஃபேல் வாட்ச் ரசீதை இன்று மாலைக்குள் வெளியிடுக!’

அண்ணாமலை தனது கடிகாரத்திற்காக ரசீதை இன்று மாலையே வெளியிடுவாரா என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுள்ளார்.

அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கெடு: ‘ரஃபேல் வாட்ச் ரசீதை இன்று மாலைக்குள் வெளியிடுக!’

தமிழக பாஜக தலைவர் செந்தில் பாலாஜி தான் அணிந்திருக்கும் கைகடிகாரம் வாங்கியதற்காக ரசீதை இன்று மாலை வெளியிடுவாரா என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து எதிர்கட்சியாக அதிமுகவை விட பாஜக கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதில் குறிப்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவ்வப்போது பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜி அண்ணாமலை இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில். இருவரும் மாறி மாறி விமர்சனங்கள வைத்து வருகின்றனர். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியுள்ள கடிகாரம் லட்ச கணக்கில் மதிப்புடையது என்றும், இந்த கடிகாரம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியானது.

இது குறித்து பதில் கேள்வி எழுப்பிய செந்தில்பாலாஜி வெளிநாட்டு கடிகாரம் பயன்படுத்துவது தான் மேக் இன் இந்தியாவா கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை திமுக ஊழல் குறித்து என்னிடம் விவாதிக்கவில்லை. நான் கைகடிகாரம் கட்டியிருப்பது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். இந்த கடிகாரம் நான் பாஜக தலைவராக பொறுப்பேற்கும் முன்பே வாங்கியது. இதற்கான ரசீது என்னுடைய அசையும் அசையா சொத்துக்கள் குறித்த தகவலை வெளியிடுவேன். திமுக அமைச்சர்கள் அதை செய்வார்களா என்று கேட்டிருந்தார்.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி அண்ணாமலை தனது கடிகாரத்திற்காக ரசீதை இன்று மாலையே வெளியிடுவாரா என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழக அரசு பல துறைகளில் வெளிப்படைத்தன்மையாக செயல்பட்டு வருகிறது. மின்சாரத்துறை மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் அதை மின்சாரத்துறை திருத்திக்கொள்ளும். திமுக அரசு மீது பாஜக தலைவர்கள் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

அண்ணாமலை அந்த கடிகாரத்தை தேர்தலுக்கு முன்பு வாங்கினாரா இல்லை அதன்பின் வாங்கினாரா என்பது முக்கியம் இல்லை. கடிகாரத்திற்காக ரசீதை வைத்துள்ளாரா என்றுதான் கேட்டிருந்தேன். அவர் இந்த கடிகாரத்தை வாங்கினாரா அல்லது யாராவது அவரக்கு வெகுதியாக கொடுத்தார்களா என்பதை நிரூபிக்க வேண்டும். முடிந்தால் இன்று மாலைக்குள் கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும்.

எனது இந்த கேள்விக்கு பிறகு ரஃபேல் கடிகாரத்திற்கான பில்லை தயார் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அறிகிறேன். முதலில் அவர் அதை வெளியிடட்டும் பிறகு அடுத்தக்கட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கூறுகிறேன் ன்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu minister senthil balaji question annamalai rafael watch

Best of Express