தமிழ்நாட்டில், 50 லட்சம் வேலைவாய்ப்புகளை எட்ட வேண்டும் என்ற முதல்வரின் இலக்கை தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கியுள்ளது இதில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் டைடல் பூங்கா புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவன தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதால், முதல்வர் நிர்ணயித்த 50 லட்சம் வேலை வாய்ப்பு என்ற இலக்கு விரைவில் எட்டப்படும். மற்ற மாநிலங்களை விட, தமிழகம் அதிக அன்னிய முதலீடுகளை பெற்றுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் தமிழ்நாட்டில் அதிகம் நிலவுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 10 லட்சம் கோடி அன்னிய முதலீட்டை பெற்றுள்ளோம், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் தஞ்சாவூரில் டைடல் பூங்கா திறக்கப்பட்ட 15 நாட்களுக்குள் அனைத்து இடங்களும் முன்பதிவு செயயப்பட்டு விட்டது. மேலும் ஒரு டைடல் பூங்கா அமைப்பதற்கான கோரிக்கை இருக்கிறது. இது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
It was my pleasure to inaugurate Hamly Business Solutions at the newly established #NeoTIDEL Park in #Thanjavur today! As a #Deltakaaran myself this was a special one for me! 🙏
— Dr. T R B Rajaa (@TRBRajaa) October 17, 2024
The Thanjavur Neo TIDEL Park is now officially HOUSEFUL, with 100% occupancy !! 🎉
Demand has been… pic.twitter.com/zbrs8IFt6W
சிப்கார்ட் (SIPCOT) உள்கட்டமைப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது மற்றும் பல தொழில்கள் வளாகத்தில் தங்கள் இடத்தை ஆக்கிரமிக்க ஃபீலர்களை அனுப்பியுள்ளன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத் தொழில்கள் மட்டும் ஏற்படுத்தப்படும், இதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தஞ்சாவூரில் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகள் நிறுவப்படலாம், இது தஞ்சாவூர் மற்றும் அண்டை மாவட்டங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
தஞ்சாவூர் விமான நிலையம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தஞ்சாவூரில் இருந்து விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் எம்பி. எஸ் முரசொலி, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.