/tamil-ie/media/media_files/uploads/2023/06/Udhayanithi.jpg)
உதயநிதி ஸ்டாலின்
சென்னை அண்ணா சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மத்திய சென்னை தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறனின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் சென்னை அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.1.20 கோடி செலவில் கட்டப்பட்ட, இந்த பேருந்து நிலையத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி பணியாற்றிய தொகுதியில் இந்த நவீன பேருந்து நிலையத்தை அமைப்பது பெருமை என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், இந்த ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். கலைஞர் கருணாநிதி பணியாற்றிய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்திற்கு வெளியே நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1.20 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைககப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குளிரூட்டப்பட்ட அறை, நவீன கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பான பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனத் என தெரிவித்துள்ளார்.
நம் பெருமைமிகு பேரறிஞர் - கலைஞர் அவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள அண்ணா சதுக்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுப் பேருந்து நிலையத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் @Dayanidhi_Maran அவர்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.20 கோடி மதிப்பில்… pic.twitter.com/VIgtN0uwKq
— Udhay (@Udhaystalin) June 10, 2023
இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் நம் பெருமைமிகு பேரறிஞர் - கலைஞர் அவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள அண்ணா சதுக்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுப் பேருந்து நிலையத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் அவர்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.20 கோடி மதிப்பில் இன்று திறந்து வைத்தோம். இந்நிகழ்வில், போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு சீருடைகளை வழங்கி, புதிதாக அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறையையும் திறந்து வைத்தோம். கோடான கோடி மக்களின் வாழ்வுக்கு நிழல் தந்த கலைஞர் அவர்கள் பெயரிலான இப்பேருந்து நிலையம், அவர் ஓய்வகம் நாடி வருவோருக்கு நிழல் தரவுள்ளதில் மகிழ்ச்சி! என பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.