Tamil News Today : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்
உள்ளம் நிறைந்த கலைஞரை நம் இல்லத்திலேயே கொண்டாடுவோம்; ஸ்டாலின் கடிதம் :
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக நெடுங்காலம் இருந்தவருமான கருணாநிதியின் பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதி கொண்டாடபட உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் உள்ளம் நிறைந்த கலைஞரை நம் இல்லத்திலேயே கொண்டாடுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் உயிரை காப்பதே நம் தலையாய பணி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குமரி மழை பாதிப்பு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு :
குமரியில் மழை பாதிப்பால் ஏற்பட்டுள்ள சேதத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணங்களை அறிவித்துள்ளார். மழை பாதிப்பால் முழுமையாக சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா ரூ.5000 மற்றும் பகுதியாக சேதமடைந்த வீடுகளிக்கு தலா ரூ.4,100 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத்தையும், மற்ற பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகையையும் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா இறப்பு; சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை :
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இறப்பு குறித்து சமூக வலைதளங்களில் தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நான் நிச்சயம் வருகிறேன்; சசிகலா ஷாக் ஆடியோ :
சட்டமன்ற தேர்தல் நேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை நிறைவு செய்து விடுதலையான சசிகலா, தீவிர அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருப்பதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தை அதிரச் செய்தார். இந்த நிலையில், கட்சி தொண்டர் ஒருவரிடம் சசிகலா தொலைப்பேசியில் உரையாடிய ஆடியோ வெளியாகி, அரசியல் களத்தை அனல் பறக்க செய்துள்ளது. அந்த ஆடியோவில் சசிகலா, ‘நான் நிச்சயம் வருகிறேன். தைரியமாக இருங்கள். கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள்’ என அதில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக அமைச்சர் மீதான பாலியல் புகார்; குற்றப்பிரிவுக்கு மாற்றம் :
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, நாடோடிகள் திரைப்பட புகழ் நடிகை சாந்தினி பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகள் அளித்த நிலையில், அமைச்சருக்கு எதிரான பாலியல் புகார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருவதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
- 21:14 (IST) 30 May 2021அடுத்த மாதம் 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய அரசுக்குக்கு வழங்கப்படும் - சீரம் நிறுவனம்
அடுத்த மாதம் 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய அரசுக்குக்கு வழங்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
- 19:54 (IST) 30 May 2021தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,864 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,864 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 493 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
- 19:18 (IST) 30 May 2021பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டனை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
- 18:23 (IST) 30 May 2021எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் பயன்பெறும் வகையில் ஆட்சி இருக்கும் - ஸ்டாலின்
சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் தான் அதிக அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் எந்த மாவட்டமும் கொரோனா தடுப்பு பணிகளில் புறக்கணிக்கபடவில்லை என்றும், எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் பயன்பெறும் வகையில் ஆட்சி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
- 18:18 (IST) 30 May 2021பிபிஇ கிட் அணிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது பாராட்டுக்குறியது - முதல்வர் ஸ்டாலின்
பிபிஇ கிட் அணிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது பாராட்டுக்குறியது என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
- 17:09 (IST) 30 May 2021பாலியல் தொந்தரவு புகார்- கராத்தே ஆசிரியரிடம் போலீசார் விசாரணை
மாணவி ஒருவரின் பாலியல் தொந்தரவு புகார் தொடர்பாக, சென்னை அண்ணாநகர் பத்மா சேஷாத்ரி பள்ளி கராத்தே ஆசிரியர் கெவினிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- 16:10 (IST) 30 May 2021சென்னையில் மேலும் ஒரு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி ஆசிரியர்களுக்கு சம்மன்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வரும் 8ம் தேதி பள்ளீ ஆசிரியர்கள் விசாரணைக்கு ஆஜராக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
- 15:23 (IST) 30 May 2021சென்னையில் மளிகைப் பொருட்கள் வீட்டிற்கே சென்று வழங்கல் - மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி
சென்னையில் மளிகைப் பொருட்கள் விற்பனை மற்றும் வீட்டிற்கே சென்று வழங்கலை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தொடங்கை வைத்தார்.
- 15:17 (IST) 30 May 2021முன்களப் பணியாளர்கள், நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டவே கொரோனா வார்டுக்குள் சென்றேன் - ஸ்டாலின்
கொரோன அவார்டுக்குள் நேரில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், “கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரை சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே கொரோனா வார்டுக்குள் சென்றேன்... இபெருந்தொற்றை நாம் வெல்வோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
- 14:18 (IST) 30 May 2021கொரோனா வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவச உடை அணிந்து நேரில் ஆய்வு
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கவச உடை அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கொரோனா வார்டுக்குள் முதல்வர் ஒருவர் நேரில் சென்று ஆறுதல் கூறுவது இதுவே முதல்முறையாகும்.
- 14:00 (IST) 30 May 2021கொரோனா சிகிச்சை மையத்தில் பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை மையத்தில் பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். பிபிஇ கிட் அணிந்து முதல்வர் ஆய்வு செய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- 13:07 (IST) 30 May 2021225 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு சீல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஊராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காத காரணத்தால், ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டிருக்கிறார்.
- 13:04 (IST) 30 May 2021புதுச்சேரியில் தொற்று 50 சதவீதம் குறைந்துள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கிலேயே கொரோனா தொற்று 50 சதவீதம் குறைந்துள்ளது என்றும் மத்திய அரசு அளித்துள்ள 7 வென்டிலேட்டர்கள் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
- 13:02 (IST) 30 May 202150 கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த ஸ்டாலின்
கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். மேலும், 50 கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
- 11:19 (IST) 30 May 2021100 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம்; திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் திறப்பு!
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களான ஈரோடு, கோவை, திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஈரோட்டில் ஆய்வை முடித்து திருப்பூருக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின், 100 படுக்கை வசதிகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் திறந்து வைத்தார்.
- 11:06 (IST) 30 May 2021கருப்பு பூஞ்சை; நெல்லையில் பெண் உயிரிழப்பு!
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் நெல்லையில் 40 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 11:03 (IST) 30 May 2021ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார்!
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது, மேலும் 3 மாணவிகள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். நீதிமன்ற காவலில் உள்ள ராஜகோபாலன் மீது தொடர்ந்து மாணவிகள் புகார் அளித்து வருவதால், பரபரப்பை எற்படுத்தி வருகிறது.
- 11:00 (IST) 30 May 2021பாலியல் புகார்; தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 12 நாள் நீதிமன்ற காவல்!
விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி இருந்த நிலையில், 12 நாள் நீதிமன்ற காவல் வழங்கி போக்சோ சிறப்பு நீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- 10:51 (IST) 30 May 2021சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது?
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு தேதி குறித்த அறிவிப்புகள் ஓரிடு நாள்களுக்கும் வெளியாகும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
- 10:49 (IST) 30 May 202121 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி; மத்திய சுகாதார அமைச்சகம்!
இந்தியா முழுவதும் 21 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட ஒரு கோடியே 82 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில், 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 10:14 (IST) 30 May 2021ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். அதன் படி, ஈரோட்டில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்களுடன் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசித்து வருகிறார்.
- 09:29 (IST) 30 May 2021சினிமா ஆசைக்காட்டி பாலியல் சீண்டல்; பிஎஸ்பிபி பள்ளி மாணவிகள் பரபரப்பு வாக்குமூலம்!
சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி, பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர்கள் ராஜகோபாலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக மாணவிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், விடுமுறை நாள்களில் பள்ளிக்கு வர சொல்லி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் மாணவிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக வழக்கை விசாரிக்கும்க் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- 08:51 (IST) 30 May 2021ஈரோடு, கோவை, திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு!
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
- 08:50 (IST) 30 May 2021முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்!
கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாவோர் எளிதில் சிகிச்சைப் பெறுவதற்கு ஏதுவாக, கருப்பு பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சையை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்குமாறு விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.