scorecardresearch

திருமாவளவனை நான் கட்டிப்பிடித்தால் சிலருக்கு ஏன் எரிகிறது? வேல்முருகன் கேள்வி

Tamilnadu News Update : எம்எல்ஏ என்ற மூன்றெழுத்து மூன்றாவது முறையாக எனக்கு கிடைத்ததற்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

திருமாவளவனை நான் கட்டிப்பிடித்தால் சிலருக்கு ஏன் எரிகிறது? வேல்முருகன் கேள்வி

Tamilnadu MLA Velmurugan Speech About Thirumavalavan MP: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, திருமாவளவனை ராமதாஸ் கட்டிப்பிடித்தால் வரவேற்பவர்கள், அதையேநான் செய்தால் பலரும் வயிறு எரிகிறார்கள் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாளவன் கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், சிதம்பரத்தில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாளவன் பிறந்த நாள் விழா நேற்று இரவு சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

சமூக நீதி சங்கங்களின் ஒற்றுமை, இசை அரங்கம், வாழ்த்தரங்கம் என்ற பெயரில் பல நிகழ்வுகள் அரங்கேறிய இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் பால அறவாழி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளரும், காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

திருமாவளவன் எம்பி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன் பேசுகையில்,

நிழ்ச்சிக்கு வந்தவுடன் திருமாவளவன் அவர்களை சந்தித்தேன் அப்போது அவர் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த படம் தற்போது அண்ணன் தம்பி  உறவு என்று சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதை பார்த்து சிலர் வயிறு எரிந்து பல கமெண்ட்களை கொடுக்கலாம் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அணைவரும் ஒரு நல்ல தலைவரை பெற்றிருக்கிறீகள் என்று மனமகிழ்ச்சியோடு இருங்கள். பொதுக்கூட்டம், மாநாடு, இலக்கிய கூட்டம் போன்ற ஒவ்வொன்றிலும் எப்படி பேச வேண்டும் என்று தெளிவு பெற்ற பேராசிரியரின் பேச்சைப்போல திருமாவளவன் உரை அமைகிறது. அம்பேத்கருக்கு பிறகு இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக போராடிக் கொண்டிருப்பவர் திருமாவளவன்.

நான் சார்ந்திருக்கிற வன்னியர் சமூகத்தில் உள்ள பாலாஜி என்பவரை திருமாவளவன் கைகாட்டி அவரது கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியிருக்கிறார். திருமாவளவன் அடையாளம் காட்டுகிறார். உலகின் அத்தனை பிரச்சனைகளையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு பேசக்கூடிய தலைவர் திருமாவளவன். அரசியல் அதிகாரம் கைக்கு வருவதற்கு திருமாவளவன் கை காட்டுபவர்களுக்கு அந்த சமூகத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எம்எல்ஏ என்ற மூன்றெழுத்து மூன்றாவது முறையாக எனக்கு கிடைத்ததற்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். எனது வெற்றியை உறுதி செய்தது விடுதலை சிறுத்தைகள்தான். திருமாவளவனை நான் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்தால் சிலருக்கு எரிகிறது. நான் என்னுடைய சொந்த சாதியினரிடம் கேட்டேன். உங்க அய்யா திருமாவளவனை கட்டிப்பிடித்து போட்டோ எடுத்தால் மகிழ்ச்சியாக வரவேற்கிறீர்கள். அதே வேல்முருகன் செய்தால் ஏன் எரிகிறது என்று கேட்டேன் அதற்கு பதில் இல்லை.

திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தருவதற்கு கூட பாஜக கும்பல் தயாராக இருக்கிறது. ஆனால் சங்பரிவார் போன்ற மதவாத அமைப்புகளிடம் திருமாவளவன் ஒருபோதும் அடி பணிய மாட்டார். திருமாவளவனோடு சரிக்கு, சமமாக விவாதிக்கிற ஒரு அறிவுஜீவி கூட தமிழக பாஜகவில் இல்லை என்று பேசியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu mla velmurugan sppech about thirumavalavan mp