NMN Former Executive Mahendran Joined DMK : சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் தற்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் துணைத்தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இந்நிலையில், 2019- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கனிசமான வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யமட கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது.
இதில் அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்த நிலையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மட்டும் கோவை தெற்கு தொகுதியில் 2-வது இடம்பிடித்தார். இதனையடுத்து தேர்தல் தோல்வி குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டாக்டர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகினர்.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டி முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், கட்சியில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் சேர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய பத்மபிரியா உட்பட 78 பேர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். தற்போது திமுகவில் இணைந்தது குறித்து பேசியுள்ள மகேந்திரன், தொடக்கத்தில் இருந்தே திமுகவின் சித்தாந்தம் தான் எனது கொள்கை என்றும் கொங்கு மண்டலத்தில் திமுக வளர்ச்சிக்காக உழைப்பேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து மகேந்திரன் திமுகவில் இணைந்தது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் இன்னும் அதிகமான இடங்களில் வென்றிருக்கலாம். கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றிருப்போம் லேட்டாக வந்தாலும் கடைசியில் திமுகவிற்கு வந்தது மகிழ்ச்சி. திமுவில் இணைந்த எல்லோரையும் அன்புடன் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் மாநில மகளிர் அணி செயலாளரும் திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயரும், முன்னாள் எம்பியுமான எம்பியுமான விஜிலா சத்தியானந்த் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து, அம்முகவின் நெல்லை மண்டல முன்னாள் தலைவர் எஸ்.கே.ஏ. ஹைதர்அலி. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராம்சன் உமா ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜிலா, அதிமுகவில் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. திராவிடக் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்கள், தமிழக நலனில் அக்கறை கொண்டவர்கள் செல்ல வேண்டிய அறிவாலயம்தான். அதனால்தான் திமுகவில் இணைந்தேன்” என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil