மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் மற்றும் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19ம் தொடங்குகிறது. ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைகிறது . ஜூன்4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும். இந்நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு கட்சிகளும் அரசியில் இயக்கங்களும் அமைப்புகளும், சங்கங்களும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தன. அந்த வகையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இதுபோல, தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர் கழகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கங்கள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“