தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இறப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை சென்னை போன்ற மாவட்டங்களில் குறைந்து வருகிறது.
திங்கட்கிழமை 7,427 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல் ஒரே நாளில் 189 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 891 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்தாக ஈரோட்டில் 795 பேருக்கும், சேலத்தில் 511பேருக்கும், திருப்பூரில் 458 பேருக்கும், சென்னையில் 439பேருக்கும் தொற்று பாதிப்பு பதிவானது. 1.65 லட்சம் பேரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டாலும், குறைந்தது 12 மாவட்டங்களில் 100க்கும் குறைவான பாதிப்பு பதிவானது.
தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,000த்துக்கும் குறைவாக உள்ளது. கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் புதிதாக 90,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 5,565 பேரும் அடங்குவர். ஆனால் அரசு வெளியிடும் பதிவேட்டில் 61,329 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், சென்னையில் 1,343 பேர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மாறுபட்ட தகவல் குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏராளமான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைப்படாதோர் மற்றும் தீவிர கண்காணிப்பு தேவையில்லாத நோயாளிகள் தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். இந்த நோயாளிகள் வீட்டு தனிமைக்கு அனுப்பப்பட்டாலும், அவர்கள் பெயர் கவனக்குறைவாக குணமடைந்தோர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன என்றார். நோயாளிகளுக்கு அறிகுறிகள் இருந்தால் பத்து நாட்களுக்கு பிறகே டிஸ்சார்ஸ் செய்ய வேண்டும் என்று மாநில அரசு கூறியுள்ளது. அறிகுறிகளின் மூன்றாவது அல்லது 4வது நாளில் மட்டுமே பரிசோதனைக்கு செல்கின்றனர். இதனால் முடிவுகள் வரும் நேரத்தில் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இதனால் தாமதமாக பதிவேட்டில் நுழைந்து சீக்கிரம் வெளியேறுவார்கள் என்றார்.
திங்கட்கிழமை கொரோனா பாதிப்பால் 189 பேர் உயிரிழந்தனர். அதில் சென்னயில் 25பேரும், கோயம்புத்தூரில் 25 பேரும், வேலூரில் 23பேரும் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி மற்றும் திருநெல்வேலியில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. வேலூரில் இறப்பு வீதம் (2.1) அதிகமாக உள்ளது. 16 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பத்தூர்(1.9%), திண்டுக்கல்(1.8%) இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil