இந்திய நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற உச்சநீதி மன்றம் தலையிட்டு சி.பி.ஐ. - அமலாக்கதுறை - வருமான வரித்துறை - போன்றவற்றை தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை குணியமுத்தூர் பகுதியி்ல் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி செய்தியாளர்களிடம் பேசினார்
அப்போது அவர் கூறியதாவது.
பா.ஜ.க இல்லாமல் எதிர்கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சி செய்கிறதோ அங்கெல்லாம் ஆளுநர்களின் போக்கு பா.ஜ.க.மாநில தலைவர்கள் போல் செயல்படுகின்றனர். தமிழகத்தில் அமைச்சராக தற்போது பொறுப்பேற்ற பொன்முடி விவகாரத்தில் உச்ச நிதி மன்றம் தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து தற்போது பதவி பிரமானம் செய்து வைத்துள்ளார். இனி வரும் காலங்களில் ஆளுநர்கள் இல்லாதவாறு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்
கோவை பாராளுமன்ற தொகுதியை பொறுத்த வரை இந்தியா கூட்டணியின் தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அண்ணாமலை மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிப்பார். பா.ஜ.க கோவையில் மட்டும் அல்ல தமிழகத்தில் கூட வெற்றி பெற முடியாது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது ஜனநாயக படுகோலை.
பா.ஜ.க.கூட்டணி பொய்யான கருத்து கணிப்புகள் மூலமாக ஒரு பரப்புரையை பரப்பி வருகிறது.,இந்தியா முழுவதும் 150 இடங்களை கூட பா.ஜ.க.கூட்டணி வெற்றி பெற இயலாது. எதிர்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் இது போன்ற கைது நடவடிக்கைகளை தோல்வி பயத்தால் பா.ஜ.க.நடத்தி வருவதாகவும் உச்ச நீதி மன்றம் தலையிட்டு சி.பி.ஐ - அமலாக்கதுறை - வருமான வரித்துறை - போன்றவற்றை தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“