தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்பியுமாக ஆ.ராசாவுக்கு சொந்தமான 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமானக ஆ.ராசா தமிழகத்தின் நீலகிரி தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இவர் கடந்த 1999 முதல் 2010-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமான 27.92 கோடி சொத்து சேர்த்ததாக எழுத்த புகாரை தொடர்ந்து சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், ஆ.ராசா வருமானத்திற்கு அதிகமாப 575 சதவீதம் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் என 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சென்னை பெரம்பலூர் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கோவையில், பினாமி நிறுவனத்தின் பெயரில் ஆ.ராசா வாங்கிய 55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த சொத்து ஆ.ராசா 2004-2007 வரை தான் மத்திய அமைச்சராக இருந்தபோது வாங்கியது என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil