சட்டவிரோதமாக சீன நாட்டினருக்கு விசா வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ப.சிதரம்பரம். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்த இவர் மீது தற்போது பல வழங்குகளில் சிக்கி வருகிறார் இந்நிலையில். இவர் நிதியமைச்சராக இருந்தபோது இவரது மகனும் சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் சட்டவிரோதமாக சீன நாட்டை சேர்ந்த 263 பேருக்கு விசா பெற்று தந்துள்ளார்
மேலும் இந்த பணிக்காக இவருக்கு 50 லட்ச ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பரை டெல்லி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் பாஸ்கர் ராமன் முதல் குற்றவாளியாகவும், கார்த்திக் சிதரம்பரம் 2-வது குற்றவாளியாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களில் கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான 18 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், பாஸ்கர் ராமனிடம் மேற்கொண்ட விசாரணையில் சட்டவிரோமாக விசா பெற்ற சீன நாட்டினருடன் அவர் தகவல் பறிமாறிக்கொண்டதாற்கான ஆதாரங்களை கைப்பற்றினர்.
இந்த விசாரணையின் போது வெளிநாட்டில் இருந்த கார்த்திக் சிதம்பரம் நேற்று டெல்லி திரும்பிய நிலையில், இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டிர் பாஸ்கர் ராமனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் அளித்த பதிலை வைத்து இவரிடம் கேள்வி கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பு தான் எந்த சீனருக்கும் விசா பெற்று தர உதவவில்லை என்று கார்த்திக் சிதம்பரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அவரை மே 30-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil