Advertisment

'ஜெய் பீம்... அல்லாகு அக்பர்' மக்களவையில் முழங்கிய திருமாவளவன்

Tamilnadu News Update : இஸ்லாமிய பெண்கள் அரசியமைப்பு சட்டம் தருகிற உரிமையின் அடிப்படையில் உடை சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதை தடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை

author-image
WebDesk
Feb 10, 2022 12:53 IST
'ஜெய் பீம்... அல்லாகு அக்பர்' மக்களவையில் முழங்கிய திருமாவளவன்

MP Thirumavalavan Speech In Parliament : கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜெய்பீம் அல்லாகு அக்பர் என்று முழங்கியுள்ளார்.

Advertisment

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில். பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகள் கல்லூரி வகுப்புக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற இந்நிகழ்வு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹிஜாப் விவகாரத்தில், மாணவிகளுக்கு வகுப்பறையில் அனுமதி அளித்தால். நாங்கள் காவி துண்டுடன் வகுப்பறைக்கு வருவோம் என்று மாணவர்கள் சிலர் காவி துண்டுடன் வந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடகாவில் அசாதரான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த விவகாரம் குறித்து நாடாளுளுமன்றத்தில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில்,

கர்நாடகாவிலே பள்ளி கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் பிரச்சனையை நாம் அறிவோம். இது பள்ளி கல்லூரியின் நிலைபாடல்ல, கர்நாடக அரசின் நிலைபாடல்ல, இது இந்திய ஒன்றிய அரசின் நிலைபாடாக இருக்கிறது. நாடு முழுவதும் இன்று பள்ளி மாணவர்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் உள்ளிட்டட அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஹரிதுவாரிலே பேசுகிறார்கள் 20 லட்சம் முஸ்லிம்களை கொல்லுவோம் என பேசுகிறார்கள், பிரதமர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார், உள்துறை அமைச்சர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் அது குறித்து கருத்து ஏதும் சொல்லவில்லை. இஸ்லாமிய பெண்கள் அரசியமைப்பு சட்டம் தருகிற உரிமையின் அடிப்படையில் உடை சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதை தடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இந்த போக்கை தடுத்து நிறுத்தியாக வேண்டும் இது நாட்டை பிளவுபடுத்துகிற முயற்சி.

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் இந்தியர்களை இந்துக்கள் முஸ்லீம்கள் இந்துகள் கிறித்துவர்கள் என்று பிரிக்கிறார்கள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரிக்கிறார்கள். பிளவு படுத்துவதும் பிரித்தாலும் சூழ்ச்சியே ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பலின் சூழ்ச்சியாக உள்ளது. இந்த போக்கை வைத்துக்கொண்டு பிரதமர் பேசுகிறார் காங்கிரஸ் தான் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாளுகிறது என்று இது உள்ளபடியே நகைச்சுவையாக உள்ளது.

இந்த போக்கை வன்மையாக எதிர்க்கிறேன் வன்மையாக கண்டிக்கிறேன். சமூக நீதித்துறையை பிரித்து ஒபிசி சமூகத்தினரின் நலனை பாதுகாக்க தனியாக அமைச்சரவை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நான் சொல்லி இன்றைக்கு ஜெய் ஸ்ரீராம் என்னும் முழக்கத்தின் மூலம் இந்த நாட்டை பிளவுப் படுத்தக்கூடிய சக்திகளுக்கு  எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். இதற்கு மாற்றுக்கு குரலாக ஜெய் பீம் மற்றும் அல்லாகு அக்பர் இன்று நாடு முழுவதும் ஒலிக்கிறது, 

எனவே இந்த அவையில் நான் ஓங்கி முழங்குகிறேன் ஜெய் பீம் அல்லாகு அக்பர் என்று பேசியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

#Parliament #Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment