Advertisment

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு : பல்சமய நல்லுறவு இயக்கம் அறிவிப்பு

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rafik
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாஜக ஆட்சி தொடர்ந்தால் எந்த உணவு உட்கொள்ள வேண்டும்,என்ன உடை உடுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிப்பார்கள் இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்க மாநில பொதுக்குழு கூட்டம் கோவை சாயிபாபாகாலனி பகுதியில் அந்த அமைப்பின் மாநில தலைவர் முகமது ரபி தலைமையில் நடைபெற்றது. இதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க ஆதர தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முகமது ரஃபி பேசுகையில்,

நாட்டில் அமைதி நல்லிணக்கம் மலர வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு முதலமைச்சர், நல்லிணக்க ஆட்சியாக, அனைவருக்கும் அனைத்தும் என திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் அவர் சகோதரத்துவத்தை உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கின்றார். இதற்காக பல்சமய நல்லுரவு இயக்கம் திமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு புதுச்சேரியில் 40 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றோம்.

ஆட்சி பொறுப்பேற்ற காலம் முதல் 1300க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கின்றனர். ஐந்தாயிரம் கோடி மதிப்பிலான் ஆறாயிரம் ஏக்கர் கோயில் சொத்துக்கள் இந்து சமய அறநிலைத்துறையால் மீட்கப்பட்டன. சென்ற மாதம் சென்னையில் அனைத்து இஸ்லாமியர்களையும் அழைத்து, அனைத்து இஸ்லாமியர்களின் தேவைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

சிறுபான்மையினரின் கல்வி, வேலை வாய்ப்பு மட்டுமின்றி, ஆலயம் கட்டுவதில் இருக்கக்கூடிய நடைமுறை பிரச்சனைகளை விளக்கினோம். உடனடியாக அந்த இடர்பாடுகளை நீக்கி கல்வி கட்டணத்திற்கான நிதியை உயர்த்தி, சிறுபான்மையினருக்கு உதவியிருக்கின்றனர். பள்ளிவாசல், தேவாலயம் உள்ளிட்டவற்றை புனரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிதி ஒதுக்கி இருக்கின்றார்.

பொதுவான அரசாங்கமாக, சிறப்பான அரசாங்கமாக, நல்லின அரசாங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  இதற்காக நாங்கள் பொதுக்குழு கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கு தெரியும், கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி நடத்தி வரக்கூடியவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், என்ன உடை உடுத்த வேண்டும் என்ன உணவு உட்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகளை கூட விதிப்பார்கள். இதனால் சிறுபான்மையினர் மக்கள் மட்டும் இன்றி பெரும்பான்மையினரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

எனவே இந்த ஆட்சி வரக்கூடாது. ஒன்றிய அரசாங்கம் மக்களுக்கு விரோதமான சட்டங்களை இயற்றி பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றில் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களுக்கு பொருளாதார நெருக்கடியை தந்த அரசாங்கமாகத்தான் இந்த 10 வருடம் ஆட்சி நடத்தி இருக்கின்றனர். 1967 ஆம் ஆண்டு முதல் திமுக அரசாங்கம் ஆண்டு வருகின்றனர். அவர்கள் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது சாதாரண வளர்ச்சி அல்ல.

இந்தியாவிலேயே மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவில் தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக  வைத்திருக்கின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள், தொழில்துறை என அனைத்து துறைகளிலும் நாம் மற்ற மாநிலங்களை விட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால் முன்னேறியிருக்கின்றோம். இந்த அடிப்படையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ்நாடு பட்ஜெட்டிலும் கூட கோயம்புத்தூருக்கு டைட்டில் பார்க், பூங்கா உள்ளிட்டவற்றை அறிவித்திருக்கின்றனர். 

கோயம்புத்தூர் மட்டுமின்றி கொங்கு மண்டல மக்கள் இதனால் பயன்பெறுவார்கள். இதனால் வேலை வாய்ப்புகள் கிடைத்து இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இது அமையும்.  கோயில், மசூதி, சர்ச் அனைத்துக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து, பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த திராவிட மாடல் ஆட்சி என்பது அனைத்து மக்களுக்குமான ஆட்சியாக இருந்து வருகின்றது.

சகோதரத்துவம் நல்லிணக்கம் ஒற்றுமை பேணிக் காக்கும் அரசாங்கமாக திமுக அரசாங்கம் சிறப்பாக செயலாற்றி வருகின்றது. இதனை மையப்படுத்தி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தில் பல்சமயநல்லூர் இயக்கம் ஈடுபடும் என ரஃபி தெரிவித்தார்.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment