/tamil-ie/media/media_files/uploads/2022/02/Chennais.jpg)
Tamilnadu News Update : மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் தீவிரம காட்டி வருகின்றனர். அதேபோல் தலைவர்களும் தங்களது கட்சயின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட தயராகி வருகின்றனர். இதில் முதல்வர் ஸ்டாலின் நாளை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், முதல்வர் உதவி கட்டப்பாட்டு மையத்திற்கு இன்று போன் செய்த மர்மநபர் ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதன்பிறகு காவவர்கள் முழுமையாக விசாரிக்கும்போது அந்தமர்மநபர் அழைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்களை வைத்து சோதனை மேற்கொண்டனர். மேலும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்காத நிலையில், இந்த தகவல் வெறும் புரளி என்று அறியப்பட்டது இதனைத் தொடர்ந்து முதல்வரின் உதவி மையத்திற்கு அழைத்தது யார் என்று விசாரணை நடத்திய போலீசார், அவர் திருக்கோவிலூர் பகுதியில் இருந்து அழைத்துள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் அவரை கைது செய்ய விரைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இல்லங்களில் வெடிகுண்டு சோதனை நடத்திய சம்பவம் வெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.