நாங்குநேரி பகுதியில், அரசு பேருந்து நடத்துனருக்கும் காவல்துறை அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இருவரும் பரஸ்பர வருத்தம் தெரிவித்து ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொண்டு சமாதானம் ஆகியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து பாளையங்கோட்டைக்கு அரசு பேருந்தில் பயணித்த ஆயுதப் படை காவலர் ஆறுமுக பாண்டியன், டிக்கெட் எடுக்க மாட்டேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து ஆறுமுக பாண்டியன் துறை ரீதியான விசாரணைக்கு சென்னை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சீனிவாசன் முன்பு ஆஜரானார்.
அப்போது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மயங்கி அவரை மீட்டு காவலர் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஆறுமுக பாண்டியன் வீடு திரும்பினார். “அரசு பேருந்தில் நான் இலவசமாக பயணம் செய்யவில்லை. டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
காவல்துறை மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது,” என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இவரின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தற்போது அந்த பேருந்து நடத்துனரும், காவல்துறை அதிகாரி ஆறுமுக குமார் இருவரும் இருவரும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்து, கட்டியணைத்து சமாதானம் ஆகினர். இது குறித்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாங்குநேரியில் பேருந்து நடத்துனர் - போலீஸ் அதிகாரி இடையே டிக்கெட் எடுப்பதில் நடந்த வாக்குவாதம் மாநில அளவில் எதிரொலித்த நிலையில், தற்போது இருவரும் சமாதானமாகியுள்ள வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“