மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு்ளள நிலையில், இதில் தமிழக அளவில் நாமக்கல் மாணவர் மாணவி முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்புக்கான சீட் வழங்கப்படும் என்ற நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 720 மதிப்பெண்கள் கொண்ட இந்த தேர்வில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மிரினல் குட்டேரி, டெல்லியை சேர்ந்த தன்மை குப்தா மற்றும் மராட்டியத்தை சேர்ந்த கார்த்திகா நாயர் ஆகிய மூவரும் முழு மதிப்பெண்களையும் பெற்று முதலிடத்தை பிடித்திருக்கின்றனர். தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் தும்மங்குறிச்சியை சேர்ந்த மாணவி கீதாஞ்சலி மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்த்த மாணவர் பிரவின் ஆகிய இருவரும் 710 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பெற்றிருக்கிறார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ஜிதா 705 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் அகில இந்திய அளவில் கீதாஞ்சலி 23-வது இடத்தையும், பிரவீன் 30-வது இடத்தையும், அர்ஜிதா 60-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அந்தந்த மாணவர்களுக்கு, மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மேலும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பது ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil