வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 13) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் கடலோர பகுதிகள நோக்கி நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெற்ற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில், இன்று (டிசம்பர் 12) 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே நாளை (டிசம்பர் 13) நெல்லை மாவட்டத்தில் உளள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல், தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நாளை (டிசம்பர் 13), நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“