தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? இறுதிப்பட்டியலில் 3 அதிகாரிகள்

Tamilnadu New DGP News : தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனத்திற்காக 3 பேர் கொண்ட பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

Tamilnadu New DGP Selection Tamil News: தமிழகத்தில் டிஜிபியாக இருக்கும் ஜே.கே திரிபாதியின் பதவிக்காலம் வரும் 30-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகத்தின் அடுத்த டிஜிபி தேர்வு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழக டிஜிபியாக நியமனம் செய்ய 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) மாநில அரசுக்கு பரிந்துறை செய்துள்ளது.

தமிழகத்தில் டிஜிபியாக பணியாற்றி வரும் ஜே.கே. திரிபாதியின் பதவிக்காலம் வரும் 30-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அடுத்த டிஜிபியை தேர்வு செய்யும் வகையில், தகுதியுள்ள அதிகாரிகள் பட்டியலை அனுப்புமாறு யுபிஎஸ்சி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த 1987 முதல் 1989 வரையிலான ஐபிஎஸ் பேட்சை சேர்ந்த 9 அதிகாரிகளின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.  

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிய டிஜிபியை தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையில் டெல்லியில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக மாநில தலைமை செயலாளர் இறையன்பு உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் தற்போதைய டிஜிபி திரிபாதி ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், தமிழக அரசு பரிந்துரைத்த 9 பேர் கொண்ட பட்டியலில் இருந்து  சி சைலேந்திர பாபு, கரண் சிங்கா (இருவரும் 1987 பேட்ச்) மற்றும் சஞ்சய் அரோரா (1988 பேட்ச்) ஆகிய 3 ஐபிஎஜ் அதிகாரிகளின் பெயாகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது, இந்த மூன்று பெயர்களில் இருந்து தமிழக அரசு மாநிலத்தின் புதிய டிஜிபியை  தேர்வு செய்ய வேண்டும். டிஜிபியை தேர்வு செய்வது தொடர்பாக பிரகாஷ் சிங் தொடர்ந்து வழக்கில், டிஜிபி பதவிக்கு தகுதியுள்ளவர்கள் பட்டியலில், கடந்த 2015-ம் ஆண்டு 5 அதிகரிகளும், கடந்த 2019-ம் ஆண்டு முதல் பரிந்துரை பட்டியலில் 3 அதிகாரிகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்ய திமுக அரசாங்கம், போலீஸ் பணியாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைக்கு பின் முடிவுக்கு வரும்.  ஏனெனில் இந்த மூவரும் தங்களது தனித்துவமான செயல்பாட்டு முறையில் தங்களை நிரூபித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu new dgp post shortlist 3 officers names

Next Story
ஏ.கே.ராஜன் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியை தமிழக அரசு பெற்றதா? ஐகோர்ட் கேள்வி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com