scorecardresearch

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்த மோடி: முதல்வர், ஆளுநர் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி அதனை திறந்து வைத்தார்.

Stalin requested the Prime Minister to run the Vande Bharat train between Chennai and Madurai
சென்னை- மதுரை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஆளுநர் பங்கேற்றனர்.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி அதனை திறந்து வைத்தார். ரூ.1,260 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த முணையம் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu new integrated portal open in chennai airport pm modi cm governor