தமிழகத்தில் சென்னை எழும்பூர். மதுரை கன்னியாகுமரி. காட்பாடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் 1800 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். தமிழகத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி வயிலாக இந்த மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதில் 440 கோடி செலவில் சீரமைக்கப்படும் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் போக்குவரத்து வசதிகளை எளிமைபடுத்துதல். பயணிகள் மற்றும் பார்சல் சேவைகளுக்கு தனித்தனிவழி அமைத்தல். வாகன நெரிசல்களை தவிர்க்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதேபோல் முதல் தளத்தி் பணிகள் வருகை மற்றும் புறப்படுவதற்கான அரங்குகள் அமைத்தல். நடைமேடை செல்வதற்காக லிப்ட் மற்றும் எக்ஸ்லேட்டர்கள் அமைத்தல் மற்றும் ஓய்வறை கழிப்பறை உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட் உள்ளன. மேலும் நடைமேடைகளை புதுப்பித்தல் பார்சல் பகுதிகளை நவீனப்படுத்துததல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்து.
இந்த பணிகள் 26 மாதங்களில் நிறைவு பெறும் என மதுரை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் 120 கோடி ரூபாய் செலவில் பலகட்ட மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சீரமைப்பு பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கன்னியாகுமரி ரயில் நிலையம் 82 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது இந்த ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் விவேகானந்தர் மண்டபம் போல் அமைக்கப்பட் உள்ளது. அதேபோல் பழமைவாய்ந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 760 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தற்போது புதுப்பிக்கப்பட உள்ள ரயில் நிலையங்கள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான மாதிரி படத்தை தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் நவீனத்தை சந்திக்கும் பாரம்பரிய இடம்! பயணிகளின் புகலிடமாக புதுப்பிக்கப்பட்ட சென்னை எழும்பூர்! சென்னை எழும்பூரின் முன்மொழியப்பட்ட மறுவடிவமைப்பு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil