scorecardresearch

புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லையா? இங்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்

Tamilnadu News Update : தற்போது விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லையா? இங்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்

Tamilnadu Ration Card Update : தமிழகத்தில் அரசின் சலுகைகள், முகவரி ஆவனம், என பலவகை பயன்களுக்கு ரேஷன்கார்டு ஒரு இன்றியமையாத ஆவணமாக இருக்கிறது. இதில் தற்போது கொரோனா தொற்று காலத்தில் அரசின் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை பெற ரேஷன்கார்டு இருப்பது அவசியம். மேலும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000 ஊக்கத்தொகை திட்டத்திற்கு முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு உள்ளது.

இதனால் ரேஷன் கார்டு இதுவரை வாங்காதவர்கள், புதிதாக திருமணமானவர்கள் என பலரும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த காலங்களில் மக்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து மாத கணக்கில் காத்திருந்து ரேஷன் கார்டு பெற்று வந்த நிலையில், தற்போது விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாத தொடக்கத்தில் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி தொடங்கிய நிலையில், ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போதைய நிலையில், கொரோனா நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருவதால், புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் அரசு தரப்பில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து வெளியான தகவலில், ரேஷன் கார்டு விண்ணப்பித்த 15 நாள்களில் கிடைக்கும் என அரசு அறிவித்ததாலும், கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுவதாலும் வழக்கமாக ரேஷன் அட்டைகள் விண்ணப்பிப்பவர்களைவிட தற்போது மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளது.

இந்நிலையில் மே மாதத்தில் 1.2 லட்சம், ஜூன் மாதத்தில் 1.57 லட்சம், ஜூலையில் 2.61 லட்சம் பேர் என கடந்த மே முதல் ஜூலை வரை மொத்தம் 7.19 லட்சம் பேர் புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாக்களில் இயங்கி வரும் 1,135 ரேஷன் கடைகளில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு புதிய ரேஷன் கார்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இதில் கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் 3,871 கார்டுகளும், கடந்த மாத இறுதியில், 9,318 கார்டுகளும் வந்துள்ள நிலையில், (மொத்தம், 13189) இந்த கார்டுகள் அனைத்தையும் வினியோகம் செய்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதில்  ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றால் தாலுகா அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu new ration card distribution update in tamil