2022-ம் ஆண்டு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், 2023-ம் ஆண்டை வரவேற்கும் வகையில், தனியார் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்கள் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வைரலாகி வருகிறது.
ஆண்டின் தொடக்க நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கமான ஒன்று. உலகின் பல நாடுகளில் பல்வேறு நேர மாற்றங்கள் இருந்தாலும் கொண்டாட்ட்டம் என்பது மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்றாக மாறிவிட்டது.
வெளிநாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பொது இடங்களில் அதிக மக்கள் கூடி கொண்டாடுவதை நாம் பார்த்திருப்போம். இந்த கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் தொடங்கியுள்ளது. இதில் தமிழகத்தில் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காகவே சென்னை வரை பயணம் செய்யும் மக்களும் அதிகம் உள்ளனர்.

சாலைகள் மற்றும் பொது இடங்களில் கொண்டாடப்பட்டு வந்த இந்த புத்தாண்டு தினம் சமீப ஆண்டுகளாக ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் பார்ட்டியை போல் கொண்டாடப்படும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது 2022-ம் ஆண்டு இறுதிக்கடத்தை எட்டியுள்ள நிலையில், 2023-ம் ஆண்டை வரவேற்கும் வகையில் சில ரிசார்ட்கள் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை இ.சி.ஆர் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில், டிசம்பர் 31-ந்தேதி இரவு 8 மணியில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் டிஜே மியூசிக், ஃபேமிலி கேம்ஸ், டான்ஸ், உள்ளிட்ட பல அம்சங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நுழைவுக்கட்டணம், 1499 தொடங்கி 4999 வரை உள்ளது. ரூம் ரெண்ட், 11000 தொடங்கி 18000 வரை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடிகர் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக பாங்கேற்க உள்ளார். இந்த கொண்டாட்டத்தில் பெல்லி நடனம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற புக்மை ஷோ உள்ளிட்ட ஆன்லைன் இணையதளங்களின் மூலம் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்து. இதில் நுழைவுக்கட்டணம் 999 முதல் 3999 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள ரிசார்ட்டில் டிசம்பர் 31 இரவு 8 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலும் டிஜே மியூசிக் எண்டர்டெயின்மெண்டுடன், கேம்ஸ் இருக்கும். இதில் நுழைவுகட்டணம் 3200 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில், நடைபெறும் புத்தாண்ட கொண்டாட்டத்தில் பெல்லி டானஸ், டிஜே மார்க், ஆகியோர் பங்கேற்க உள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்த ரிசார்ட்டில், நுழைவுக்கட்டணம் 999 முதல் 3999 வரை நிர்ணையிக்கப்ட்டுள்ளது. புக் மை ஷோ டிக்கெட் நவ் உள்ளிட்ட இணையதளங்களில் இதற்காக பதிவு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“