/indian-express-tamil/media/media_files/2025/04/04/o3VgcJ80X0O4U6dJJw7g.jpg)
-
Apr 04, 2025 19:57 IST
குற்றால அருவிகளில் குளிக்க தடை
தென்காசி மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Apr 04, 2025 19:29 IST
பாம்பன் புதிய பாலத்தில் எஸ்.பி.ஜி அதிகாரிகள் ஆய்வு
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி நாளை மறுதினம் திறந்து வைக்க உள்ள நிலையில், புதிய செங்குத்து பாலம் மற்றும் பழைய தூக்கு பாலத்தை ஏற்றி, இறக்கி கப்பல், ரயிலை இயக்கி எஸ்.பி.ஜி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
-
Apr 04, 2025 19:05 IST
மாஞ்சோலை - ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடக்கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். வனத்தை தவிர பயிர் சாகுபடி, தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை நடக்கிறதா? என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
-
Apr 04, 2025 17:27 IST
ஈரோடு மாவட்டத்திற்கு ஏப்.8ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 8-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார். மேலும், அதற்கு பதிலாக ஏப்ரல் 26-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 04, 2025 17:04 IST
வக்ஃப் வாரிய திருத்த சட்டம்; திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
-
Apr 04, 2025 15:14 IST
சுற்றுலா பயணிகளுக்கு அல்ல... வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு: ஐகோர்ட் விளக்கம்
ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. வாகன கட்டுப்பாடு உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 8ல் விசாரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
-
Apr 04, 2025 14:21 IST
ஈரோட்டில் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
ஈரோடு அந்தியூர் அருகே மேம்பத்தி கிராமத்தில், பட்டா மாறுதல் செய்ய ரூ.3000 லஞ்சமாக வாங்கிய வி.ஏ.ஓ. பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரகாஷுக்கு இடைத்தரகராக இருந்த அருள் ராஜா பணத்தை வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
-
Apr 04, 2025 13:51 IST
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை - ஐகோர்ட்
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி குழு மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நேற்று கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை நீக்க கோரி தமிழக அரசு தரப்பில் நீதிபதிகளிடம் முறையீடு செய்யப்பட்டது. தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது.
-
Apr 04, 2025 13:09 IST
இரு சக்கர வாகனத்தில் இருந்து வெளியேறிய பாம்பு கடித்து இளைஞர் மரணம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து வெளியேறிய பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்தார். சாலையில் சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தின் முன்புற டூமில் இருந்து வெளியேறிய பாம்பை பார்த்ததும், பிரேக் பிடித்த போது, இளைஞரின் கையில் பாம்பு கடித்தது. பாம்பு கடித்ததில் சுருளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 21 வயதான ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார்
-
Apr 04, 2025 12:41 IST
ஹெலிகாப்டரில் இருந்து தூவப்பட்ட மலர்கள். பரவசமாகி முழக்கமிட்ட பக்தர்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கில், ஹெலிகாப்டரில் இருந்து தூவப்பட்ட மலர்கள். பரவசமாகி முழக்கமிட்ட பக்தர்கள். தருமபுரம் ஆதீனம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
-
Apr 04, 2025 12:40 IST
பயணிகளைக் காபாற்றிவிட்டு உயிரை விட்ட ஓட்டுநர் - நெல்லையில் சோகம்
நெல்லை ஏர்வாடியில் அரசுப் பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுநர் மாரியப்பன், வாகனத்தை பத்திரமாக நிறுத்திவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சு வலி ஏற்பட்டதும் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் மயங்கி சரிந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவே, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Apr 04, 2025 11:22 IST
வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு. சேலம் பெரியார் பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், PUTER Foundation என்ற அமைப்பை அரசு நிதியில் தொடங்கியுள்ளதாகக் கூறி, துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வழக்கு. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
-
Apr 04, 2025 10:14 IST
நீலகிரியில் இ-பாஸ்; மறு ஆய்வு செய்யக்கோரிய மனு இன்று விசாரணை
இ-பாஸ் நடைமுறை குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
-
Apr 04, 2025 10:13 IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் ' அஞ்சன கோல்' கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் கூடுதலாக செம்பினால் செய்யப்பட்ட'அஞ்சன கோல்' கிடைத்துள்ளது. 13 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த அஞ்சன கோல், 29.5 மி.மீ. நீளமும், 6.6 மி.மீ சுற்றளவும், 2.64 மி.கி. எடையும் கொண்டதாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.